Home சம்பவம் வாணியம்பாடியில் பூட்டிய வீட்டில் 2345 லிட்டர் எரிசாராயம் போலீஸ் பறிமுதல்

வாணியம்பாடியில் பூட்டிய வீட்டில் 2345 லிட்டர் எரிசாராயம் போலீஸ் பறிமுதல்

19
0
SHARE

ஆம்பூர், செப். 25&

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2345 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமராஜ் நகர் மலை அடிவாரத்தில், எரிசாராய கேன்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில், போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மலை அடிவாரத்தில் ஒரு வீடு தொடர்ந்து மூடிய நிலையில் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

அவர்கள்அந்தவீட்டைசோதனைமேற்கொண்டதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 67 எரிசாராயம் கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .  பின்னர் பிடிபட்ட 2.50 லட்சம் மதிப்பிலான 67 எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, வீட்டின் உரிமையாளர் மற்றும் எரிசாராயம் விற்பனை செய்து வந்த 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் அணைத்து கிராமப்புற மற்றும் நகரங்களில் தொடர்ந்து எரிசாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், கலால் போலீசார் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.