Home தமிழகம் கள்ளக்குறிச்சி பாரதி கல்லூரியில் 14&வது பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி பாரதி கல்லூரியில் 14&வது பட்டமளிப்பு விழா

25
0
SHARE

கள்ளக்குறிச்சி, செப். 25&

பாரதி கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

530 மாணவியருக்கு பதிவாளர் பட்டங்களை வழங்கினார். கள்ளக்குறிச்சி பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பதிவாளர் பெருவழுதி மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் எம்.திலகவதி வரவேற்று பேசினார். பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.கந்தசாமி, செயலாளர் முனைவர் லட்சுமி கந்தசாமி, அக்சலிஸ் பள்ளி தாளார் பாரத் குமார், சாந்தி பாரத் குமார் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் கள்ளக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பயின்ற முதுகலை மாணவியர் 80 பேருக்கும், இளங்கலை மாணவியர் 450 பேருக்கும் பட்டங்களை, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் வி.பெருவழுதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

பின்னர்அவர்பேசுகையில், நீங்கள் கற்ற கல்வி பிறருக்கு பயன்பட வேண்டும். அதுதான் உண்மையான கல்வி. பல்வேறு அழுத்தங்கள், சுமைகள் என பலவித இன்னல்களுக்கு நடுவில் கல்லூரிக்கு அனுப்பி நீங்கள் பட்டம் பெற மூல காரணம் பெற்றோர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

மாணவியர்இப்போதுபெற்றுள்ளபட்டம்என்பதுஉங்கள்வாழ்க்கையில்அடுத்தநிலைக்குகொண்டுசெல்லஉதவும்ஒருபாஸ்போர்ட். தன் நம்பிக்கையும் விடாமுயற்சியும் தேவை.

இப்போது மகளிருக்கு பலதுறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முயற்சியும், பயிற்சியும் முன்னேற்றத்தின் படிகள். பலதுறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர்.

இன்னும் பலதுறைகளில் சாதிக்க தைரியமும், துணிச்சலும் கலந்து செயல்பட்டால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்இவ்விழாவில்இக்கல்லூரியில்இளங்கலைபாடப்பிரிவில்தரவரிசைபட்டியலில்இடம்பெற்றமாணவியர் (தமிழ்) சரண்யா, பானுபிரியா, காவியா, (நுண்ணுயிரியல்) பிரிவில் ஹமீது சவுதியா அல்மாஸ், முதுகலை (ஆங்கிலம்) மேனகா, (கணினி அறிவியல்) அற்புதா ஆகியோருக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றுகளும் வழங்கினார்.