Home விளையாட்டு ஜப்பான் பேட்மிண்டன் ஸ்ரீகாந்த், பிரனாய் தோல்வி

ஜப்பான் பேட்மிண்டன் ஸ்ரீகாந்த், பிரனாய் தோல்வி

11
0
SHARE

டோக்கியோ, செப். 23& ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்கள் பிரிவில் பி.வி. சிந்து, சாய்னா நேவால் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலக சாம்பியன்ஷிப் வீரரான விக்டர் அக்செல்சென்னை எதிர்கொண்டார். இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21&17, 21&17 என நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். சீனாவின் ஷி யுகியை எதிர்கொண்ட எச்.எஸ்.பிரனாயும் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.