Home விளையாட்டு ஹாட்ரிக் பந்தை வீச, ஊக்கப்படுத்திய தோனி குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

ஹாட்ரிக் பந்தை வீச, ஊக்கப்படுத்திய தோனி குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

26
0
SHARE

புதுடெல்லி, செப். 23& தோனியிடம் ஆலோசனைக் கேட்டு, ஹாட்ரிக் பந்தை வீசியதாக குல்தீப் யாதவ் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்ஹாட்ரிக்விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்அவர், மேத்யூ வாடே, ஆஷ்டன் ஆசர், கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3வது இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஆவார்அவருக்கு முன்பு சேத்தன் சர்மா நியூசிலாந்துக்கு எதிராகவும் (1987, நாக்பூர்), கபில்தேவ் இலங்கைக்கு எதிராகவும் (1991, கொல்கத்தா) ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில்ஹாட்ரிக்விக்கெட் குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது:&

இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்துவிட்டேன். கடைசி பந்தை எப்படி வீசுவது என்று சற்று பதற்றம் அடைந்தேன்இந்த நிலையில் தோனியிடம் கேட்டேன். அவர்உனக்கு எப்படி வீச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே வீசுஎன்று ஊக்கப்படுத்தினார். அது சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். அதுவே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது.