Home அரசியல் கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட்  நோட்டீசை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு அக்....

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட்  நோட்டீசை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு அக். 4க்கு வழக்கு ஒத்தி வைப்பு

23
0
SHARE

புதுடெல்லி, செப். 23& கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட், அக்டோபர் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்ததில் பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியதுஇந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, சி.பி.ஐ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியது. எனவே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு தடை எழுந்தது.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். லுக்அவுட் நோட்டீசுக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததுசுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால தடையை ரத்து செய்து, லுக்அவுட் நோட்டீஸ் செல்லுபடியாகும் என உத்தரவிட்டது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட் அக்டோபர் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.