Home தமிழகம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு...

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

13
0
SHARE

சென்னை, செப். 23&

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2015ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2009ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த உத்தரவு பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தப்படவில்லைஇந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். ஈரோடு பெரும்பள்ள ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அது தொடர்பான அறிக்கையை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி 19 மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கை தாக்கல் செய்யாத நெல்லை, தூத்துக்குடி, குமரி, நாகை, கரூர் உட்பட 13 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஹ§லுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 13 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகவில்லை.

கலெக்டர்கள் சார்பில் தமிழக வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் நேரில் ஆஜராகி, 13 மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் 13 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக முடியாததற்கான விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்தார்.

 இருந்தபோதிலும் நீதிபதிகள் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 12&ந் தேதி 13 மாவட்ட கலெக்டர்களும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:&

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட வாரியாக நீர்நிலைகளை கணக்கெடுத்து அதன் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை கீழ்க்கோர்ட்டுகள் விசாரிக்க கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும்’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.