Home தமிழகம் இன்று சுதந்திரதின விழா: 16 காவல்துறை அதிகாரிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் ரொக்கப்பரிசு முதல்வர்...

இன்று சுதந்திரதின விழா: 16 காவல்துறை அதிகாரிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் ரொக்கப்பரிசு முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்

44
0
SHARE

சென்னை, ஆக. 15& 2017 ம் ஆண்டு சுதந்திர தினத்தையட்டி 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்&அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பதக்கம் பெறுபவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர், கே.வீரமணி, தலைமையிடத்து காவல் துணை கண்காணிப்பாளர்  (பொருளாதார குற்றப் பிரிவு), அசோக் நடராஜன், மதுரை காவல் ஆய்வாளர் (மத்திய குற்றப் பிரிவு) வெ.சந்திரசேகரன், சேலம் அம்மாபேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜா.நாகராஜன், சென்னை மெட்ரோ காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை) சி.உமாதேவி, சென்னை தலைமையிடத்து காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை) ஆ.சிவ ஆனந்த், நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜே.அன்பு பிரகாஷ்,திண்டுக்கல் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன்,பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜே.மலர்கொடி,திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மு. சுந்தரமூர்த்தி,ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை குற்றப் பிரிவு,குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் காவல் துணை இயக்குநர்  கே.ஜெயந்த் முரளி, சென்னை நுண்ணறிவுப் பிரிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), காவல் துறைத் தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி,திருச்சி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் ஆ.மயில்வாகனன்,(தற்பொழுது காவல் துணை ஆணையர்,தலைமையிடம், மதுரை மாநகரம்.)ஓமலூர் உட் கோட்டம்,காவல்  துணை கண்காணிப்பாளர் மு.சந்திரசேகரன்,பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம்,காவல் ஆய்வாளர்,எஸ். விஜயன்,விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலையம்,முதல் நிலை பெண் காவலர்1565,ஜே.சுதா,ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய்   ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.மேற்கண்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

இதையட்டி விழா நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா முழுவதும் சுதந்திரதின விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 16 காவல் துறை அதிகாரிகளுக்கு 8 கிராம் தங்கப்பதக்கத்தையும், ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.