Home தமிழகம் கிரேட் லேக்ஸ் கல்லூரியில் மாணவர்களுடன் வருண்காந்தி எம்.பி. உரையாடல்

கிரேட் லேக்ஸ் கல்லூரியில் மாணவர்களுடன் வருண்காந்தி எம்.பி. உரையாடல்

22
0
SHARE

கல்பாக்கம், செப். 23&

கல்பாக்கம் அருகே இயங்கும் கிரேட் லேக்ஸ் மேலாண்மை பட்டய கல்லூரியில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பாலா வீ. பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைதி ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பாரத பிரதமர் இந்திரகாந்தியின் பேரனும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி எம்.பி. கலந்துகொண்டு மாணவர்களிடம் பேசினார்.

அப்போது, இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை தற்போது 120 கோடியே தாண்டிசெல்கிறது. இதில் 19 வயதிலிருந்து 25 வயதுள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தான் நாட்டின் கண்கள். நாட்டின் எதிர்காலத்தையும், முன்னேற்றத்தையும் நிர்ணயிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள்.  இதற்கு முன் இருந்த தலைவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் எல்லாவற்றிக்கும் நேரில் சென்றோ அல்லது நேரில் வரவழைத்தோ தான் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். ஆனால் இன்றைய கணினி மைய உலகில் அந்த நிலை மாறி முகநூல், வாட்ஸ் அப் போன்ற பல்வேறு இணைய சேவைகள் மூலம் நினைத்ததை உடனடியாக பரிமாறிக் கொள்ளும் வசதி வந்துவிட்டது.

இது போன்ற வசதிகள் மூலம் பல முன்னேற்றங்களை அடையலாம். நாட்டில் அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பல்வேறு  சலுகைகள் கிராம மக்களுக்கு சென்றடைவதில்லை. ஏழை கிராம மக்களுக்கு மாணவர்களான நீங்கள் தான் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் குறைவாகவே உள்ளனர். அரசியலில் பெண்கள் அதிகளவு வரவேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.