Home தலையங்கம் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்

குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்

13
0
SHARE

தமிழகத்தின் தலைநகர் தான் சென்னை மாநகரம். தலைநகர் சென்னை சிறிய நகராக இருந்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் சிலவற்றை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. இங்கு தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், கடைகள் என்று ஏராளம்ஏராளம்இதனால் சேகரமாகும் குப்பைகளும் தாராளம்தாராளம்சென்னை நகரின் எந்த பகுதியில் சுற்றி வந்தாலும் மலைமலையாய்குப்பை கோபுர தரிசனத்தை காணலாம். இவற்றை முறையாக அள்ளுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. குப்பை அள்ளுவதில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது நமது சிங்கார சென்னையின் மாநகராட்சி நிர்வாகம்.

பெருநகர சென்னை மாநகராட்சிஎன்று பெயரில் மட்டும் பெரிய அந்தஸ்தை காட்டிக்கொள்கிறது. உள்ளே சென்று பார்த்தால் குப்பைக் குவியல்களின் துர்நாற்றங்கள் தான் மிஞ்சுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு மட்டும் அல்லாமல் கொடிய நோயையும் இலவசமாக பரப்புகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களுக்கும்குப்பைக் கூலங்கள் ஏற்ற இடமாக உள்ளது.

அதுமட்டுமா? ஈக்களும் குப்பைகளில் அமர்ந்து ஈயாடிவிட்டு நம் உடலையும் அடிக்கடி தொட்டு புதிய புதிய நோயை வழங்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் குப்பைகள் மட்டும் குறைந்தது போல் தெரியவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள், சுத்தம் செய்கிறேன் என்று கூறி துடைப்பத்தை கையில் எடுத்துபோஸ்கொடுப்பதோடு சரி. அதன்பிறகு குப்பைகளை அள்ள என்ன வழி என்பதை பற்றி அக்கறையே காட்டுவது கிடையாது.

சில இடங்களில் குப்பைகளை வாருகிறோம் என்ற பெயரில் மாநகராட்சி வண்டி அராஜக போக்கையும் கடைப்பிடிக்கிறது. சிறிய சிறிய தெருக்களில் பெரிய வண்டியை நிறுத்திக்கொண்டு பகல் நேரத்தில் தான், அதுவும் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் பரபரப்பாக பயணிக்கும்பீக் ஹவர்ஸ்சில் அடாவடி தனத்தை கடைபிடிக்கின்றனர். இதனால் மக்கள் துர்நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு தனது வாகனங்களில் நிற்க வேண்டிய கட்டாய அவலமும் நடந்தேறுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குப்பையை சரியாக வாரிப்போட்டுக்கொண்டும் செல்வது கிடையாது. வழிநெடுக கொட்டிக்கொண்டே செல்கிறது. இதை எல்லாம் எப்படி சகித்துக்கொள்வது. பெரிய குப்பை வண்டிகளில் இரவு நேரங்களில் ஊர் அடங்கிய சமயத்தில் மேற்கொள்ளலாமேஇதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதேஆனால் பகலில் தான் குப்பைகளை வாருவோம்அனைவருக்கும் தொல்லை கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்..

சென்னை மக்கள் நொடிக்கு நொடி குப்பைகளை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குப்பையை வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த அளவுக்கு அக்கரை காட்டவேண்டுமோ அந்த அளவுக்கு மெத்தனத்தை காட்டுகிறது. நத்தை வேகத்தைவிட மிகமிக தாமதமாக செயல்படுகிறது. ஆனால் குப்பைகளை முறையாக வாருகிறோம் என்றுமட்டும் கூறி மார்தட்டிக்கொள்வது என்ன நியாயம்மக்களிடம் அந்த வரிஇந்த வரிஎன்று கூறி  பணத்தை மட்டுமே வசூலிப்பதில் இருக்கும் ஆர்வம் குப்பைகளை முறையாக வாருவதில் ஏன் இருப்பதில்லை…?

முதலில் சென்னையில் இருக்கும் குப்பைகளை முறையாக வாரிக்கொண்டு பிறகு சிங்கார சென்னைஎழில்மிகு சென்னை என்று வர்ணித்துக்கொள்ளுங்கள்சென்னைக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. ஆனால் சென்னை நகரில் உள்ள குப்பை தான் சென்னையின் அடையாளமாக உள்ளது. இந்த எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து மாற்றுங்கள்.

உயர்அதிகாரிகள்எல்லாம்எப்போதாவதுகுப்பைகளைபற்றிகவலைப்பட்டதுஉண்டா? அவர்கள் வீடுகளில் இருந்து மட்டுமே எவ்வளவு குப்பைகள் ஒரு நாளைக்கு சாலைகளில் வீசப்படுகின்றது என்பதை யோசித்துப்பாருங்கள்ஆகவே குப்பைகளை முறையாக வார சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்தாலே போதும் பல தொற்று நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றலாம். இதனை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here