Home தமிழகம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.75 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடம் விரைவில் முதல்வர் திறந்து...

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.75 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடம் விரைவில் முதல்வர் திறந்து வைப்பார் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

12
0
SHARE

சென்னை, செப், 23& ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்தர சிகிச்சையளிக்கும், மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை முதல்வர்  விரைவில் திறந்து வைக்க உள்ளதாக  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

தூய்மையேசேவைஇயக்கத்தை, தமிழ்நாடு முழுவதும் துவங்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு இணங்க, நேற்று   சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில், அந்த திட்டத்தை, மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய   அமைச்சர் விஜயபாஸ்கர்,  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சையளிக்கும் வகையில்,  மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடம் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இதனை மிக விரைவில் தமிழக முதல்வர் பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார்.மருத்துவ மாணவர்களுக்கு விடுதி கட்டிடம், மருத்துவ மனைக்கு உபகரணங்கள் என 150 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்டாலின் மருத்துவமனையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் , புதிதாக 13 அரசு மருத்துவமனைகளில், புதிதாக சிடி ஸ்கேன் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். தற்போது திண்டிவனம், ஆம்பூர், கொடைக்கானல், மயிலாடுதுறை ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரூ 8 கோடி செலவில் புதிகாக 4 சி.டி ஸ்கேன் நிறுவப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில்,  அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் மற்றும் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.