Home இந்தியா திருப்பதியில் பிரமோற்சவம் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு

திருப்பதியில் பிரமோற்சவம் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு

12
0
SHARE

சென்னை, செப். 23& திருப்பதியில் நாடைபெற உள்ள பிரமோற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புதிருப்பதியில் நடைபெற உள்ள பிரமோற்சவ விழாவை முன்னிட்டு அரக்கோணம்& சென்னை&ரேணிகுண்டா இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் செப். 23&ம் தேதி முதல் அக். 2&ம் தேதி வரை தினமும் இயக்கப்படும்.

இந்த நாட்களில் அரக்கோணத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில் மாலை 5 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்இந்தரயில்திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.

ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்துச்சேரும்இந்த ரயில் புத்தூர், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், பெரம்பூர் ஆகிய இடங்களில் நின்று வரும்இந்த நாட்களில் தினமும் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.