Home மற்றவை காஷ்மீரில் கடந்த 7 மாதங்களில் 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில்  சேர்ந்தனர்

காஷ்மீரில் கடந்த 7 மாதங்களில் 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில்  சேர்ந்தனர்

32
0
SHARE

ஜம்மு, ஆக.15&  காஷ்மீரில் கடந்த 7 மாதங்களில் 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்த போதிலும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்பில் சேர்ப்பதில் இந்த இயக்கங்கள் குறியாக உள்ளன.

கடந்த 7 மாதங்களில் இம்மாநிலத்தை சேர்ந்த 70 இளைஞர்கள் பல்வேறு தீவிரவாத இயக்கங்களில்  சேர்ந்துள்ளனர். குறிப்பாக, தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா, சோபியான் மற்றும் குல்கான் மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் சேர்ந்துள்ளனர்.

  தீவிரவாத இயக்கங்களின் புகலிடமாக இந்த 3 மாவட்டங்கள் உள்ளன.

இந்த மாவட்டங்களின் குறிப்பாக, புல்வாமா, மாவட்டத்தின் நில அமைப்பு, தீவிரவாதிகளின் செயல்பாட்டுக்கு மிகவும் வசதியாக உள்ளன.

இம்மாவட்டங்களில் பழத்தோட்டங்களும், வயல்வெளிகளும், அடந்த காடுகளும் அதிகமாக உள்ளன. தீவிரவாதிகள் பதுங்க, இவை உதவியாக இருக்கின்றன.

கடந்தாண்டு ஜுலையில் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புஸ் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பர்கான்வானி இங்குதான், அதேபோல், லஷ்கர் இதொய்பா இயக்கத்தின் தலைவன் அபு துஜனா, அபு முசா மற்றும் 12க்கும் மேற்பட்ட இதர தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த முக்கியவாத தளபதிகளின் புகலிடமாக இந்த மாவட்டம்தான் இருந்தது. இங்குதான் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படைகள் எடுத்த கடுமையான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பின் காரணமாக, 2011 முதல் 2013 வரை தீவிரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. 2010ல் 54 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்தனர். அதைத்  தொடர்ந்து, 2010ல் இது 23 ஆக குறைந்தது. 2012ல் 21 ஆகவும் 2013ல் 16 ஆகவும் குறைந்தது.

ஆனால், 2014க்குப் பிறகு இந்த எண்ணிகை மீண்டும் படிப்படியாக அதிகமாகி வருகிறது. 2014ல் 53, 2015ல் 66, 2016ல் 88பேர் தீவிரவாத இயக்கத்தில்  சேர்ந்தனர் இந்தாண்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 77 இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகமாகி வருவது,  பாதுகாப்பு படைகளுக்கு கவலை அளித்துள்ளது.