Home தமிழகம் திருவாரூர் மாவட்ட கோ ஆப்டெக்சில் புதிய ரக ஆடைகள் குவிப்புஸ் கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட கோ ஆப்டெக்சில் புதிய ரக ஆடைகள் குவிப்புஸ் கலெக்டர் அறிவிப்பு

17
0
SHARE

திருவாரூர், செப். 21&

திருவாரூர் மாவட்டம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்,தீபாவளியை முன்னிட்டு புதிய ரக ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளது என சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை துவக்கி வைத்த மாவட்டக் கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் உள்ள கோ  ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை  மாவட்டக் கலெக்டர் நிர்மல்ராஜ் துவக்கி வைத்து, விற்பனைக்கு வந்துள்ள புதிய ரக ஆடைகளை பார்வையிட்டார்.அப்போது அவர் கூறுகையில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் சங்கங்களின் தாய்ச் சங்கமாக விளங்கும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்களான தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்கவும்,கோஆப்டெக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனை நிலையங்களை கோ  ஆப்டெக்ஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் விற்பனை நிலையங்கள் உள்ளது. கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர்மண்டலத்தில் உள்ள கோ  ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.11 கோடியே 11 லட்சம் விற்பனை செய்யப்பட்டது.இந்த ஆண்டு ரூ.14 கோடியே 90 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் விற்பனை நிலையத்தில் 2016 ஆம் ஆண்டில் தீபாவளி விற்பனை ரூ.42 லட்சத்து 29 ஆயிரம் ஆகும். 2017 ஆம் ஆண்டான இந்த ஆண்டில் தீபாவளி விற்பனையின் இலக்கு ரூ.55 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆர்கானிக் காட்டன் சேலைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,ஆரணி,சேலம்,திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், சுங்கடிச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கூறைநாட்டுப் புடவைகள்,நெகமம் காட்டன் சேலைகள், எல்லோருக்கும் பட்டுச் சேலைகள்,கோரா காட்டன் சேலைகள், ஜீன்ஸ் டாப்ஸ்,மீரட் போர்வைகள்,சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுமுகை,அருப்புக்கோட்டை,பரமக்குடி, உறையூர்,வனவாசி,சேலம் பருத்தி சேலைகள், ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு ரகங்கள் மற்றும் இயற்கை சாயமிட்ட பட்டுச் சேலைகள், ரெடிமேட் சட்டைகள், மாப்பிள்ளை செட் என ஏராளமான வகைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் செலுத்தும் முதல் தவணையில் 25 சதவீதம் மதிப்பிற்குரிய துணிகளை அறிமுக சிறப்பு பரிசாக கோ ஆப்டெக்ஸ் வழங்குகிறது என மாவட்டக் கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். விழாவில்,ஆர்.டீஓ.முத்துமீனாட்சி, கோ  ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சீனிவாசன், மேலாளர் தணிக்கை நிர்மலா,துணை மண்டல மேலாளர் அன்பழகன்,திருவாரூர் கோஆப்டெக்ஸ் கிளை மேலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.