Home விளையாட்டு பத்மவிபூஷன் விருதுக்கு, தோனி பெயர் பரிந்துரை

பத்மவிபூஷன் விருதுக்கு, தோனி பெயர் பரிந்துரை

12
0
SHARE

புதுடெல்லி, செப்.21&

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகர கேப்டன், மகேந்திர சிங் தோனியின் பெயரை பத்மவிபூஷன் விருதுக்கு ஏகமனதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி..) பரிந்துரை செய்துள்ளது.

மகேந்திரசிங்தோனியின்வருகைக்குபின்னர், இந்திய கிரிக்கெட் அணி புத்துயிர் பெற்றது என்றால் அது மிகையல்ல. இவரின் சீரிய தலைமையில் இந்தியா 2 வகையான கிரிக்கெட்டிலும் (அதாவது 2007&ம் ஆண்டு டி&20 மற்றும் 2011&ம் ஆண்டு 50 ஓவர்) உலக கோப்பையை வென்று அசத்தியது. மேலும் சாம்பியன்ஸ் டிராபியிலும் சாதித்தது.

வெற்றி அரிதாக கருதப்பட்ட, வெளிநாட்டு மண்ணில் கூட திறமையை நிரூபித்தது. இவர் பல்வேறு சமயங்களில், தோல்வியின் விளிம்பில் இருந்து அணியை மீட்டுள்ளார். அதனால் இவருக்கு, ‘நல்ல முறையில் போட்டியை முடித்து வைப்பவர்என்றும் வெற்றிகர கேப்டன் என்ற பெயரும் வந்தது.

இவர் தற்போது விராத் கோலி தலைமையிலான அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். 36 வயதான தோனி 302 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 9,737 ரன்னும், 90 டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி 4876 ரன்னும் எடுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, 78 சர்வதேச டி&20 கிரிக்கெட்டில் விளையாடி, 1212 ரன்னும் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 16 சதம் அடித்துள்ள தோனி (6 டெஸ்ட், 10 ஒருநாள் போட்டி), அரை சதத்தில், 100&ஐ தொட்டு விட்டார்.

விக்கெட் கீப்பராக 584 கேட்ச்களை (256 டெஸ்ட், 285 ஒருநாள், 43 டி&20) பிடித்துள்ளார். மேலும் 163 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே அர்ஜூனா, கேல்ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தோனிக்கு, நாட்டின் 3&வது உயரிய விருதான பத்மவிபூஷன் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.. செயல் தலைவர் சி.கே. கன்னா கூறும்போது, ”கிரிக்கெட் துறையில், தோனியின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவரின் பெயர் பத்மவிபூஷன் விருதுக்கு ஏகமனதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த விருதை பெற போகும் 11&வது சர்வதேச இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார். இவருக்கு முன்னர், சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட், சந்து பார்டே, பேராசிரியர் டி.பி. தியோதர், கர்னல் சி.கே. நாயுடு, லாலா அமர்நாத், ராஜா பலிந்திர சிங் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.

இதில் பாட்டியா ராஜா பலிந்திர சிங், 13 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளார். விஜய் ஆனந்த், 1936&ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் ஆவார்.