Home உலகம் மெக்சிகோவில் ஒரே மாதத்தில் 2&வது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 200 பேர் பலி

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் 2&வது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 200 பேர் பலி

7
0
SHARE

மெக்சிக்கோ,  செப்.21&

மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல சரிந்து விழுந்தன. இதில் 200 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று முன் தினம் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.இதில் 200 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டில் கடந்த 1985ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று  முன் தினம் தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த பேரழிவு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் கூறுகையில், மெக்சிகோ சிட்டியை கடவுள் காப்பாற்றட்டும்.

நாங்கள்உங்களோடுஇருக்கிறோம்என்றுதெரிவித்துள்ளார்.