Home தமிழகம் முஸ்லிம்கள் இனப்படுகொலையை கண்டித்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் இனப்படுகொலையை கண்டித்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

11
0
SHARE

திருச்சி, செப். 21&

ரோஹிங்யா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து நேற்று திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர்.

   திருச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரோஹிங்யா (மியான்மர்) முஸ்லீம்களை இனப் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து ராமகிருஷ்ணா பாலம் அருகே  மாவட்ட தலைவர் நஸீர் அஹமது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில தனிக்கை குழு உறுப்பினர் கோவை.ரஹமத்துல்லாஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள்  அஹமது, சையது முஹம்மது, மாபூஜான், முஹம்மது ஹாசைன், குலாம் தஸ்தஹீர், ரபியுல்லாஹ், முஹமது ஆரிப், ரிஸ்வான், முஹம்மது யாஸின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்பாட்டத்தின் போது அவர்கள் கூறும் போது ரோஹிங்யா முஸ்லீம்களை மியான்மரில் படுகொலை செய்தும் நாட்டிலிருந்து வெளியேற்றவும் அப்பாவி அம்மக்களை கருவறுக்கும் மியான்மர் அரசை வன்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம்.

மூன்று இலட்சத்திற்கும்; அதிகமான முஸ்லீம்கள் அகதிகளாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடுமை அங்கு நடைபெற்று வருகின்றது.முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் வாழும் நாட்டில் இது போல் இனப்படுகொலை நடப்பது மிகவும் கண்டிக்க தக்கது.

இந்தஇனப்டுகொலையைஉலகநாடகள்தடுத்துநிறுத்தநடவடிக்கைஎடுக்கவேண்டும். இந்தியாவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மியான்மர் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என ஆர்பாட்டத்தின் மூலம் கேட்டு கொண்டனர்.   இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திரளான பெண்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.