Home தலையங்கம் தொழில்நுட்ப வசதிகளை சரியாக பயன்படுத்தலாமே…

தொழில்நுட்ப வசதிகளை சரியாக பயன்படுத்தலாமே…

10
0
SHARE

நற்பண்பு, நற்குணம், நல்ல செயல், திறமையான ஆற்றல் என்று தமிழகம் கலாசாரம் மிகுந்த மாநிலமாகும். மக்கள் நெறிமுறைகளை பின்பற்றி சீரும், சிறப்போடும் வாழ்ந்து வந்தனர். இதற்கு நடுவில் புகுந்தது தான் தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் புகுந்த குறுகிய காலத்திலேயே அபரிமிதமான வளர்ச்சியை எட்டிவிட்டது. தொழில் நுட்பத்தை வரவேற்கிறோம்.

ஆனால் அது அழிவுக்கு துணையாக இருக்கக்கூடாது. உலகை கைக்குள் அடக்கும் அளவுக்கு ஆன்ட்ராய்டு, &போன் என்று அதிநவீன செல்போன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் இன்டர்நெட் கனெக்ஷன் கொடுத்து அனைத்தையும் பார்த்துவிடலாம். இதனால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. இளைய தலைமுறையினர் செல்போனுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.

இதனைபயன்படுத்தும்சிலநிறுவனங்கள்ப்ளூவேள்போன்றபடுபயங்கரகொலைகாரசாப்ட்வேரைஇளையதலைமுறையைநோக்கிவீசுகின்றனர். இவை இடும் கட்டளைகளைடீன் ஏஜ் உடையோர் அப்படியே செய்கின்றனர். அந்த அளவுக்கு அவர்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்படி தொழில்நுட்பத்தில் உள்ள தீங்குதான் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது.

இளம் பெண்களும் இதுபோன்ற தொழில்நுட்பத்திற்கு படித்துக் கொண்டிருக்கும் இளம் பெண்கள் அடிமையாகி இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை பாதை எங்கு போகிறது என்று அறியாமலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்ற தொழில்நுட்ப தடங்கல்களையும் தாண்டி, குடும்ப பெண்களை டி.வி. சீரியல்கள் அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. டி.வி. சீரியல் என்பது பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் சீரியல் முடியும் போதும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் வைத்து தான் முடிக்கிறார்கள். இது வீட்டின் பொறுப்பை பெண்களால் திறம்பட கவனிக்க முடியாமல் செய்துவிடுகிறது. பிள்ளைகளையும், கணவனையும் கவனிப்பதில் கவனக்குறைவை ஏற்படுத்துகிறது.

இப்போது எடுக்கப்படும் சீரியல் காட்சிகள் மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இதனை பார்க்கும் பெண்கள் வீட்டில் தகராறு செய்கின்றனர். அதுமட்டும் இன்றி சினிமா படத்தில் வரும் காட்சிகளை போல் ஆடல், பாடல் ஆபாசங்களையும் சில டி.வி.க்கள் தாங்கள் ஒளிபரப்பும் சீரியல்களில் காண்பிக்கின்றனர். மேலும் கணவனை மனைவி அடிப்பது, மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது, மனைவிக்கு உள்ள கள்ளத்தொடர்பு என்று தவறான தகவல்களை நியாயப்படுத்தியும் சீரியல் காட்சிகள் அமைகிறது. மேலும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு சென்று வன்முறையில் ஈடுபடுவது என்று சமுதாயத்தை வேறு பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

இதுபோன்ற சுலோ பாய்சனை ஏற்படுத்தும் காரியங்களை கைவிட நாம் தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். முயன்றவரை செல்போனில் தவறானவற்றை தவிர்ப்பது நல்லது. இதேபோல் தவறான டி.வி. சீரியல்களையும் தவிர்க்கலாமே. இதையும் தாண்டி செல்போனிலும், டி.வி.யிலும் நல்ல நல்ல விஷயங்களை காண்பிக்கிறார்கள். சோனி எர்த் டி.வி. போன்ற பகுப்பாய்வு தகவல்களை அளிக்கும் டி.வி. சேனல்களை பார்க்கலாமேசெல்போனில் நன்மை தரும் ஆயிரம் சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தலாமே. இப்படி தற்போதுள்ள தொழில்நுட்பம் நமக்கு நல்லபல நன்மைகளையும் செய்கிறது. இதனை பயன்படுத்தினால் நல்லது…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here