Home இந்தியா பீகாரில் பலத்தமழை; 4 மாவட்டங்கள் கடும் சேதம் முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

பீகாரில் பலத்தமழை; 4 மாவட்டங்கள் கடும் சேதம் முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

21
0
SHARE

பீகார், ஆக 15& பீகார் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாநில முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

பீகாரில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பீகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் பேசினார். அப்போது அவர் பீகார் அரசுக்கு இந்த கடினமான நிலையை சமாளிக்க உதவி புரியும் என உறுதி அளித்தார்.

மேலும் பிரதமர் மோடி கூறுகையில், பீகாரில் இருக்கும் நிலைமையை நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம், பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றிய சிந்தனை எப்பொழுதும் என் மனதில் உண்டு ’’என்று கூறினார்.

நேபால் மற்றும் சீமான்சல் ஆகிய இடங்களில் பெய்து வரும் கடும் மழையால் பீகாரில் ஓடும் மகானந்தா மற்றும் கன்கை நதிகளில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டதால் 4 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதை பற்றி பீஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கூறுகையில், கூடுதலாக 10 மீட்பு பணிகள் கேட்டுள்ளதாக கூறினார்.

ஹெலிகாப்டர்களும் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.