Home அரசியல் நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகள் முன்பு பா.ஜ.க. இளைஞரணியினர் போராட்டம் தமிழிசை...

நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகள் முன்பு பா.ஜ.க. இளைஞரணியினர் போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி 

77
0
SHARE

சென்னை, செப். 19&  நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் வேண்டாம் என கூறும் தி.மு..வினர் நடத்தும் தனியார் பள்ளிகள் முன்பு பா... இளைஞரணியினர் போராட்டம் நடத்துவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்பிரதமர் மோடியின் பிறந்த நாளையட்டி தூய்மை சேவை  இயக்கத்தின் கீழ் , பா...வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வைத்தியராமன் தெருவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டார்பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் பணிகள் முடங்கி போய் உள்ளது. இந்த சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமே தவிர பல  தமிழக மக்களுக்கு நலம் பயக்கும் நவோதயா பள்ளி நிச்சயம் வேண்டும். நவோதயா பள்ளி வெறும் ரூ.200 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர்கள் தமிழக மக்களுக்கு எதிரான கருத்தினை நவோதயா பள்ளி வேண்டாம் என கூறுவதன் மூலம் எதிரான கருத்துகளை கூறுகின்றனர்தி.மு..வை சார்ந்தவர்கள் சி.பி.எஸ்.. பள்ளி, ஆங்கிலப் பள்ளி நடத்துகின்றனர். அவர்கள் எல்லாம் நவோதயா பள்ளிகளை வேண்டாம் என கூறுகின்றனர். அவர்கள் பள்ளிகளை அடையாளம் கண்டு பா...வின் இளைஞர் அமைப்பு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு கேள்வி எழுப்புவர். இவ்வாறு தெரிவித்தார்.