Home விளையாட்டு 100 அரை சதம் அடித்து தோனி சாதனை சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து

100 அரை சதம் அடித்து தோனி சாதனை சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து

26
0
SHARE

சென்னை, செப்.19&

100 அரை சதம் அடித்து, சாதனை படைத்துள்ள

மகேந்திரசிங் தோனிக்கு, தெண்டுல்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்

விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது.

இதில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில், தித்திப்பான வெற்றியை ருசித்தது. முதலில் இந்தியா 87 ரன்களுக்கு, 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில் களம் கண்ட தோனி, பாண்ட்யா ஜோடி, அற்புதமாக ஆடி இந்தியாவின் ரன்குவிப்புக்கு காரணமாகினர். அபாரமாக ஆடிய தோனி 79 ரன்களும், பாண்ட்யா அதிரடியாக ஆடி 83 ரன்களும் குவித்தார்.

இதன் மூலம் தோனி, ஒருநாள் போட்டியில் தனது 66&வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின்

ஒட்டுமொத்த 100&வது அரை சதமாகும். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த 4&வது இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர் (164), ராகுல் திராவிட் (146) மற்றும் சவுரவ் கங்குலி (107) ஆகியோர் சர்வதேச போட்டிகளில் 100 அரைசதங்கள் கடந்துள்ளனர்.

100 அரை சதங்கள் கண்ட தோனிக்கு, தெண்டுல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘மறுபடியும் ஒரு சதம்’, ‘ஆனால் இந்த முறை ஸ்டம்புக்கு முன்னால்.’ ‘வாழ்த்துகள் மகி.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கடந்த சில நாள்களுக்கு முன்பு, 100 ஸ்டம்பிங்குகள் செய்து தோனி சாதனை படைத்தார். தற்போது அவர் 100 அரை சதங்கள் என்ற சாதனையை படைத்துள்ளார். இரண்டையும் ஒப்பிட்டு, சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.