Home மற்றவை 16 அரசு பிரிவுகளுக்கு தொலைபேசியில் கோரிக்கை தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

16 அரசு பிரிவுகளுக்கு தொலைபேசியில் கோரிக்கை தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

24
0
SHARE

சென்னை, செப். 19&

நீட் தேர்வு விலக்கு உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் முதன்மை செயலர் தொடங்கி தனிப்பிரிவு அலுவலர் வரை உள்ள 16 பிரிவுகளுக்கும் தொலை

பேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்களித்து, இதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ செயல்பாட்டார்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை திரும்பப்

பெறுதல், நீட் தேர்வு விலக்குக்கு குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெறுதல், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பி.எஸ்.டிக்கு அடிப்படை தகுதி என்பதை மாற்றுதல், பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகையை குறைக்காமல் வழங்குதல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முன் முயற்றி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் முதன்மை செயலர் தொடங்கி தனிப்பிரிவு அலுவலர் வரை உள்ள 16 பிரிவுகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாரிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு என்பது டபயூ.டி.ஓவின் வேறொரு பரிணமாம் என்பது தெரிகிறது. இதேபோல் கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது மிகவும் கொடுமை.

5&ம் மற்றும் 8&ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற நிலையை ஏற்படுத்த உள்ளது அரசு இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் அழிந்து விடும். முதுநிலை பட்டம் பெற்ற மாணவன் ஏற்கனவே பல தேர்வுகளில் வெற்று பெற்று தான் பி.எஸ்.டி. படிக்க வந்திருப்பான், இப்படி இருக்கும் நிலையில் நெட் தேர்வின் தேர்ச்சியே பி.எஸ்.டி.க்கு அடிப்படை என்பது மிகவும் தவறு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இருந்து பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.85ஆயிரம், இந்தாண்டு முதல் ரூ.55 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் இத்திட்டத்தின் இந்தவருடம் சேர்ந்து 42,000 மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விடும் நிலை ஏற்படும். எனவே இது குறித்து முதல்வரின் முதன்மை;க்ஷீ செயலர் தொடங்கி தனிப்பிரிவு அலுவலர் வரை உள்ள 16 பிரிவுகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.