Home அரசியல் கூடுவாஞ்சேரியில் டி.டி.வி.தினகரனுக்கு வரவேற்பு

கூடுவாஞ்சேரியில் டி.டி.வி.தினகரனுக்கு வரவேற்பு

14
0
SHARE

படப்பை,செப்.19&

டி.டி.வி.தினகரன் நேற்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சியில் நடைபெறும் கூட்டத்திற்கு பங்கேற்க சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். கூடுவாஞ்சேரியில் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட தினகரன் அணியை சேர்ந்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ரத்தினமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் வாணவேடிக்கையுடன் ரோஜா மாலை அணிவித்து, பூங்கொத்து தந்து சால்வை அணிவித்து, சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான வாசுதேவன், நந்திவரம் & கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் ராஜதேவன், மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள்,

கலந்து கொண்டனர்.