Home தலையங்கம் ஆசிரியர்களின் கடமை

ஆசிரியர்களின் கடமை

21
0
SHARE

அடிப்படை உரிமைகள், அடிப்படை தேவைகளை இன்று பணம் இருந்தால் தான் அடைய முடியும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். கல்வி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவக் கனவை நினைவாக்க முடியாமல் தடுப்பதற்காக நீட் என்ற கொடிய விஷம் வந்துவிட்டது. இதனால் டாக்டர் ஆசையை ஏராளமான மாணவர்கள் துறந்துள்ளனர். இதையும் தாண்டி வேலியே பயிரை மேய்ந்தார்போல் கல்வித்துறையில் சில செயல்கள் நடந்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடுகளில் டியூசன் எடுப்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்போது ஒருபடி மேலே போய் தனியார் நடத்தும் டியூசன் சென்டர்களில் ஆசிரியர்கள் பணிக்கு செல்கின்றனர். அங்கு ஆரம்ப கல்விக்கு மாதம் ரூ.150 முதல் ரூ.300 வரையிலும், உயர்நிலை வகுப்புகளுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரையும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தனி சப்ஜக்ட்டுகளுக்கு  கூடுதல் தொகையும் வசூலிக்கப்படுகிறது.

சம்பாதிக்கும் மோகத்தில் உள்ள சில ஆசிரியர்கள் இந்த தனியார் டியூசன் சென்டருக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பள்ளிகளில் அவர்கள் முறையாக பாடம் நடத்துவது கிடையாது என்ற தகவலும் பரவிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் தனிப்பட்ட லாபத்துக்காக மாணவர்களின் வருங்காலத்தை வீணடிக்கப்பார்க்கிறார்கள். இதுபற்றி கல்வித்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.

கட்டாயக்கல்விஉரிமைச்சட்டத்தின்படிஅரசுப்பள்ளிஆசிரியர்கள்தனிப்பயிற்சிவகுப்புகள்எடுக்கத்தடைஉள்ளது. அதையும் மீறி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்பு எடுத்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஆனாலும்இதனைசிலஆசிரியர்கள்கேட்டதாகதெரியவில்லை. இலை மறை காய்போல் தங்கள் பணியை மறைவாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களின் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை ஆகும்.

இப்போது செயல் வழிக்கற்றல் முறையும், திறன் வளர்ப்பு பயிற்சியும் உள்ளன. இதன் வாயிலாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து கல்விக் கண்களை திறந்த பெருமையை தட்டிச் செல்லலாமே…! மருத்துவர்கள் எங்கு பணியாற்றினாலும், தனக்கென்று சொந்தமான கிளீனிக்கை வைத்துக்கொண்டு அங்கு வரும்படி நோயாளிகளை கட்டாயப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஆசையை வெளிப்படுத்துவதை விட, மாணவர்களின் கல்விக் கண்ணை திறக்க மறுத்து, அவர்களை வேறுமாதிரி பயமுறுத்தி டியூஷன் சென்டருக்கு வரச்சொல்வது கொடுமையான விஷயமாகும்.

இதனை எத்தனை ஆசிரியர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். கல்வித்துறையில் தமிழகத்தை முன்னேற்ற வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆனால் அந்த கடமையை செய்ய தவறுவது பெற்ற மகனுக்கு வழங்க வேண்டிய நற்செயலை செய்ய தவறியதற்கு ஒப்பாகும். இதனை புரிந்துகொண்டால் நலமே…!