Home தமிழகம் ஐ.ஐ.டி.டி.எம். கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

ஐ.ஐ.டி.டி.எம். கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

30
0
SHARE

சோழிங்கநல்லூர், செப். 18&

காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி நிறுவனத்தின் 5வது பட்டமளிப்புவிழா அதன் வளாகத்தில் நடைபெற்றது. தலைமை விருந்தினராக ரூர்கேலா, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான, தாழ்வெப்ப பொறியியல் பேராசிரியர் சுனில்குமார் சாரங்கி அழைக்கப்பட்டிருந்தார்கள். துறை வல்லுனர்களால் நிரம்பிய மேடையில், ஆட்சிமன்ற குழுத்தலைவர், பேராசிரியர் அனந்த், கல்விநிறுவன இயக்குனர், பேராசிரியர் பன்ஷிதர் மாஜி, பேராசிரியர் நாராயணன், எரிக்சன் இந்தியா நிறுவனத்திலிருந்து அனந்தலெக்ஷ்மணன் ஆகியோருடன், செனட் உறுப்பினர்கள் முன்னிலையில், நிறுவனத்தலைவர், பேராசிரியர் அனந்த் அவர்கள், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவுத்திறனுடன் தனித்திறன்களை கட்டமைக்க தேவையான பாடத்திட்ட மேம்பாட்டை வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், கல்வி, அறிவு, மற்றும் அறிந்துகொள்ளும் ஆர்வம்  ஆகிய மூன்றும்  சிறந்த குடிமகனாக நீடித்து வாழத்தேவையான  ஒருங்கிணைந்த பண்புகள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். நிறுவன இயக்குனர் பேராசிரியர் திரு.  பன்ஷிதர் மாஜி  அவர்கள்  அறிக்கை வாசித்து, மாணவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

அதனைத்தொடர்ந்து, இந்தியாவின் இன்றைய தொழில்நுட்பக் கல்வியின் நிலை பற்றி, தலைமை விருந்தினர், பேராசிரியர், திரு. சாரங்கி அவர்கள் கீழ்வருமாறு பேசினார்கள்.

சிங்கப்பூரிலிருக்கும் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் சர்வதேசஅளவில் போட்டியிட்டு பெற்ற வெற்றியை குறிப்பிட்டுப்பேசிய அவர் மிமிமிஜிஞிவி கல்வி நிறுவனமும் சர்வதேச அளவில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் முக்கியபங்காற்றும் என  நம்பிக்கை தெரிவித்தார். 109  இளநிலைப்பட்டங்கள், 25 முதுநிலைப்பட்டங்கள் மற்றும் 7 ஆராய்ச்சிப்பட்டங்கள் உட்பட மொத்தம் 141 பட்டங்கள் அளிக்கப்பட்டன.