Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி

44
0
SHARE

ஹாம் வானொலி அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயத்து வருகிறது. அப்படியிருக்கும் ஹாம் வானொலியை அனைவரும் இயக்க ஆர்வம் கொள்வதில் ஒன்றும் அதிசயம் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும் ஹாம் வானொலி பல்வேறு வகைகளில் உதவுகிறது. அவர்களே ஹாம் வானொலி நிலையங்கள் அமைத்து செயல்படவும் பல்வேறு அமைப்புகள் உதவி புரிகின்றன. தமிழகத்திலேயே பல்வேறு மாற்றுத்திறனாளிகள் ஹாம் வானொலித் துறையில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.

ஹேண்டி ஹாம்

இது என்ன புதிய சொல்ஹேண்டி ஹாம்என குழம்ப வேண்டாம். மாற்றிதிறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான அமைப்பு தான் இந்த ஹேண்டி ஹாம். 1967ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்குகிறது. மாற்றுத்திறனின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கான உதவிகளை இந்த ஹேண்டி ஹாம் அமைப்பு  செய்கிறது. பல்வேறு கருவிகளையும், ஹாம் ரேடியோவை இயக்குவதற்காக வழங்குகிறது. இந்த ஹேண்டி ஹாம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஷ்ஷ்ஷ்.லீணீஸீபீவீலீணீனீ.நீஷீனீ எனும் இணைய முகவரியை நாடலாம். இந்த இணைய தளத்தில் பல்வேறு தகவல்கள் ஹேண்டி ஹாம்களுக்கு கொட்டிக் கிடக்கின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாது, ஹாம் வானொலி பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்பவர்களுக்கும்,  பொருளாதாரப் பிரச்சனை காரணமாக ஹாம் வானொலிக்கான உபகரணங்களை வாங்க முடியாதவர்களுக்கும், இந்த அமைப்பானது உதவி செய்கிறது. நீங்கள் மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருந்தாலும், உங்கள் பகுதிகளில் அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை இந்த அமைப்பிற்கு அறிமுகப்படுத்தலாம். மேலும் நீங்களும் தன்னார்வலராக இதில் செயல்படலாம். சீ.க்யூ. (சினி) எனும் மாத இதழ்  இவர்களுக்காக பல்வேறு சிறப்பு கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. சீ.க்யூவானது நான்கு வெவ்வேறு தலைப்புகளில் மாத இதழ்களை வெளியிட்டு வருகிறது. ‘அமெச்சூர் ரேடியோமற்றும்சீ.க்யூ. வி.ஹெச்.எஸ்.’ (சினி க்ஷிபிஷி) எனும் இதழை 50 மெ.ஹெ. மற்றும் அதற்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் இயங்குபவர்களுக்காக வெளியிட்டுவருகிறது. இது தவிரவோல்ட் ரேடியோ ஆன்லைன்மற்றும்பாப்புலர் கம்யூனிகேசன்ஆகிய மாத இதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

ஆம்சாட்

அமெச்சூர் ரேடியோ சேட்டிலைட் கார்பரேசன்’ (ஷ்ஷ்ஷ்.ணீனீsணீt.ஷீக்ஷீரீ)என்ற அமைப்பானது ஹாம் ரேடியோவுக்கான செயற்கைக்கோள்களை  செலுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. உலகின் எந்த நாட்டில் ஹாம் ரேடியோவுக்கான செயற்கைக்கோள் செலுத்தினாலும், இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. முதல் ஹாம் வானொலிக்கான செயற்கைக்கோள் 1962ல் செலுத்தப்பட்டது. இது மோர்ஸ் குறியீடுகளை பீக்கான் (ஙிமீணீநீஷீஸீ) வழியாக செலுத்தப் பயன்படுத்தப்பட்டது. மோர்ஸ் குறியீடு, பீக்கான்கள் ஹெச். (பிமி) என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. மோர்ஸ் குறியீட்டில் ஹெச்.ஐ என்பது டிட், டிட், டிட், டிட் மற்றும் டிட், டிட் ஆகும், அதனாலேயே இதனைதந்திச் சிரிப்பு’ (ஜிமீறீமீரீக்ஷீணீஜீலீமீக்ஷீ’s லிணீuரீலீ) என்கின்றனர். அதன் பின் ஆஸ்கார்1 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

பெரும்பான்மையான செயற்கைக்கோள்கள் ஹாம் வானொலியை அஞ்சல் செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் சில ஹாம் செயற்கைக்கோள்கள், கல்வி தொடர்பான ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 2011ல் டெக்ஸாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், பாஸ்ட்ரேக் எனும் செயற்கைக்கோளை ஏவினர். செயற்கைக்கோள் வழி ஹாம் ரேடியோவை செயல்படுத்துவது மிக எளிது. செயற்கைக்கோள்களை தொடர்பு கொள்ள வேண்டி சிறப்பு ஆண்டனாக்கள் தற்பொழுது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஜிகிறிஸி  (ஜிuநீsஷீஸீ கினீணீtமீuக்ஷீ றிணீநீளீமீt ஸிணீபீவீஷீ) என்ற அமைப்பானதுஹாம் பாக்கெட் வானொலிக்குஅட்சாரம் போட்ட அமைப்பாகும். இவர்கள் பல புதுமைகளை ஹாம் வானொலியில் செய்துவருகின்றனர். குறிப்பாக ஜிகிறிஸி (ஷ்ஷ்ஷ்.tணீஜீக்ஷீ.ஷீக்ஷீரீ) உறுப்பினர்கள் தான் முதன் முதலில் மென்பொருள் துணை கொண்டு இயங்கக்கூடிய  எஸ்.டி.ஆர் வானொலிகளை வடிவமைத்தனர். இந்த ஷிஞிஸி (ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ ஞிமீயீவீஸீமீ ஸிணீபீவீஷீ) தான் அடுத்த தலைமுறை வானொலிகளாக அறியப்படுகின்றன. இதன் துணை கொண்டு, நமது கம்ப்யூட்டரிலேயே டிஜிட்டல் தரத்திலான சிற்றலை மற்றும் ஹாம் வானொலிகளைக் கேட்கக் கூடிய வகையில் வடிவமைத்துள்ளனர்.

இளம் மகளிர் வானொலிக் குழு (சீலிஸிலி சீஷீuஸீரீ லிணீபீவீமீs ஸிணீபீவீஷீ லிமீணீரீuமீ) பெண்களுக்காக தொடங்கப்பட்ட ஹாம் வானொலிக் குழுவாகும். பெண்களை, ஹாம் வானொலிக்குள் இணைப்பதற்காக இந்த குழு செயல்படுகிறது. பெண்களுக்கான ஹாம் வானொலிப் போட்டிகளை இந்த அமைப்பு ஆண்டு தோறும் வைக்கின்றது. அதன் விபரங்களை ஷ்ஷ்ஷ்.ஹ்றீக்ஷீறீ.ஷீக்ஷீரீ எனும் முகவரியில் சென்று பார்க்கலாம்.

மோர்சுக்கு வந்த மவுசு

உடனே நான் மோர்ஸ் குறியீட்டினைக் கற்றுக்கொள்ள வேண்டும். அஜீத்விவேகம்படத்தில் பயன்படுத்துகிறார், எனவே, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என நம் இளைஞர்கள் கேட்பர். அவர்களுக்கான பதில்  ஆண்ட்ராய்ட் செயலி. இன்று கூகுள் பிளே ஸ்டோரில் 100க்கும் மேற்பட்ட மோர்ஸ் குறியீடுகளை கற்றுக்கொள்வதற்கான செயலிகள் கிடைக்கின்றன. இவற்றில் எதனை தேர்வு செய்வது என்பதே நம்மில் பலருக்கும் குழப்பமான ஒன்றாக இருக்கும். அந்த குழப்பத்தினை போக்கும் வகையில் இந்த விஷீக்ஷீsமீ சிஷீபீமீ ஜிக்ஷீணீவீஸீமீக்ஷீ செயலி உள்ளது.

இந்த செயலியின் துணை கொண்டு, எழுத்துக்களை அனுப்பும் பயிற்சி, வார்த்தைகளை அனுப்பும் பயிற்சி, வேகத்தினை கட்டுப்படுத்தி மோர்ஸ் கோட் அனுப்பும் பயிற்சிகள் போன்றவை இதில் உள்ளன. இதனால் இது பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கும், இந்த செயலியை தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கற்றுக்கொள்ள வழிவகை செய்துள்ளனர். மோர்ஸ் கோட் குறித்த ஒரு சிறு புத்தகத்தினையும் இந்த செயலியிலேயே பதிவேற்றியுள்ளனர். 2013ல் வெளிவந்த இந்த மோர்ஸ் கோட் டிரேயினர் (விஷீக்ஷீsமீ சிஷீபீமீ ஜிக்ஷீணீவீஸீமீக்ஷீ) இதுவரை பத்து லட்சத்திற்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மோர்ஸ் புத்தகம்

புத்தகங்கள் என்றாலே இன்று பலரும் விழுந்து அடித்துக்கொண்டு படிக்க தப்பித்து ஓடுகின்றனர். இந்த புத்தகம் அப்படி ஓட வேண்டிய அவசியம் இல்லாத புத்தகம். இப்படியான புத்தகங்கள் இனி வருவது சிரமமான ஒன்றே. காரணம், கிரியேட்டிவ் எழுத்து இன்று பெரும்பான்மையானவர்களுக்கு கைக்கூடி வருவதில்லை. ஜிலீமீ சிகீ நிமீமீளீ‘s நிuவீபீமீ tஷீ பிணீஸ்வீஸீரீ திuஸீ ஷ்வீtலீ விஷீக்ஷீsமீ சிஷீபீமீ என்ற நீண்ட பெயர் கொண்ட இந்த புத்தகத்தின் பக்கங்களும் நீண்டது. ஆம் 454 பக்கங்கள் கொண்ட ஒரே மோர்ஸ் குறியீட்டுப் புத்தகம். இதனை ஞிணீஸீ ஸிஷீனீணீஸீநீலீவீளீ ரசித்து ரசித்து எழுதியுள்ளார். காரணம் அவ்வளவு அரிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளது.

விளையாட்டாகவே எப்படி மோர்ஸ் குறியீடுகளைக் கற்றுக் கொள்ளலாம், மோர்ஸ் குறியீட்டில் எப்படி ஒலிபரப்புவது, எது போன்றகீகளை மோர்ஸ் குறியீடுகளை அனுப்ப பயன்படுத்துவது போன்ற பலத் தகவல்களை செயல்பாட்டுடன் விளக்கியுள்ளது, படிப்பவர்களை சோர்வடையச் செய்யாது. இணையத்தில் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும் இந்த மென்பொருள் பல வகைகளில் புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள மோர்ஸ் குறியீடுகளுக்கான மன்றங்கள், மோர்ஸ் குறியீடுகளுக்கு என இயங்கிக் கொண்டிருக்கும் இணைய தளங்கள் போன்றவை இந்த புத்தகத்தின் பிற்பகுதியில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கு வழியில்  மோர்ஸ்

அஜீத் நடித்த விவேகம் படத்தில் ஒரு சில காட்சிகளில் மோர்ஸ் குறியீட்டில் தகவல்கள் பரிமாறப்படுவது குறித்து தொடர்ந்து ஊடக நண்பர்கள் விசாரித்து வந்தனர். மோர்ஸ் குறியீட்டில் தகவல் பரிமாற்றம் காலம் காலமாக நடந்துவரும் ஒன்றுதான். இந்த தொழில்நுட்பம் ஏதோ இன்று தான் வந்தது போன்று அனைவரும் இது பற்றியே இணையத்தில் பேசி வருகின்றனர். அது உண்மையல்ல. ‘ஒரே உலகம், ஒரே மோழிஎன்ற தாரக மந்திரத்தில் செயல்பட்டு வருகிறது, இந்த மோர்ஸ் குறியீடுகளை பயன்படுத்தும் ஹாம் வானொலியின் அமைப்புகள். தொடர்பியலில் மோர்ஸ் குறியீடுகள் மிக முக்கியமானவை. வரலாற்றில் இது பல்வேறு காலகட்டங்களில் பல அமைப்புகளுக்கு பெரிதும் உதவி புரிந்துள்ளது.

இந்த மோர்ஸ் குறியீட்டினை இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்வதில் சோம்பேறித் தனம் காட்டி வருவதால், அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் லீttஜீs://னீஷீக்ஷீsமீநீஷீபீமீ.sநீஜீலீவீறீறீவீஜீs.நீஷீனீ/tக்ஷீணீஸீsறீணீtஷீக்ஷீ.லீtனீறீ எனும் இந்த இணையதளம். இதன் துணை கொண்டு வார்த்தகளை டைப் செய்தால், அதனை மோர்ஸ் குறியீடுகளாக மாற்றிக் கொடுக்கும் பணியை மிக நேர்த்தியாக செய்கிறது. இந்த இணையத்தின் சிறப்பே நான்கு வழிகளில் மோர்ஸ் குறியீடுகளை கற்றுக்கொள்ள வகை செய்துள்ளனர். மோர்ஸ் குறியீட்டில் இருந்து எழுத்துக்கும், எழுத்தில் இருந்து மோர்ஸ் குறியீட்டுக்கும், மோர்ஸ் குறியீட்டில் இருந்து ஒளி மற்றும் மோர்ஸ் குறியீட்டில் இருந்து ஒலி வழிகளில் கற்றுக்கொள்ள வசதி செய்துள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகளும் கற்றுக்கொள்ள முடியும் வகையில் இந்த லீttஜீs://னீஷீக்ஷீsமீநீஷீபீமீ.sநீஜீலீவீறீறீவீஜீs.நீஷீனீ/tக்ஷீணீஸீsறீணீtஷீக்ஷீ.லீtனீறீ இணையதளம் உள்ளது.

அடுத்த வாரமும் கேட்போம்