Home தலையங்கம் சேம நல நிதி உயர்வுக்கு பிறகாவது உயிர்தெழுமா நீதி…?

சேம நல நிதி உயர்வுக்கு பிறகாவது உயிர்தெழுமா நீதி…?

16
0
SHARE

நீதித்துறை, சட்டமன்றம், ஆட்சித்துறை இந்திய அரசியல்மைப்பில் சுதந்திரமாக செயல்படும் முக்கிய துறைகளாகும். ஆனால் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேக்கத்தில் உள்ளது. வழக்குகளை சந்திக்க நேரிடும் மக்கள் எப்போது தான் வழக்கு முடிவுக்கு வருமோ என்ற வேதனையில் நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்கின்றனர்.

பணமும் போய், அலைச்சல் அதிகரிக்கத்தான் செய்கிறது. இதனாலேயே சிலர் வழக்கு விஷயம் என்றாலே பயப்படும் நிலை ஏற்படுகிறது. நடமாடும் நீதிமன்றங்களும் இருக்கின்றன. இதனை அதிகரித்தால் நலமாக இருக்கும். குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் ஏராளமானவை பெண்டிங்கில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.5.25 லட்சம் சேமநல நிதியை ரூ. 7 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். மேலும் நீதிமன்ற அரங்கங்கள், கட்டிடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார். இது நல்ல விஷயம் தான். வரவேற்க தக்கது. இத்தோடு வழக்குகள் தேக்கத்தை குறைக்க என்ன வழி இருக்கிறது என்பதையும் இந்த அரசு ஆராய வேண்டும். நீதிமன்றங்கள் விரிவாக்கப்பட வேண்டும்.

இதற்காகபுதியதிட்டத்தைகொண்டுவரவேண்டும். கொண்டு வருவது மட்டுமின்றி அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு நிரபராதி தண்டனை அனுபவிக்கக்கூடாது என்று எப்படி சட்டம் சொல்கிறதோ, அதேபோல் அப்பாவி மக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடப்பதை குறைக்க வழிவகை செய்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருக்கலாமே