Home மற்றவை சென்னை மாவட்டத்தில் 29&ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் 29&ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்

23
0
SHARE

சென்னை, செப். 18&

சென்னை மாவட்டத்தில் பட்டம், பட்டயப் படிப்பினை முடித்தவர்களுக்கு 29 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சாந்தோமில்  உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்காக பல்வேறு கல்வித்தகுதிகளுடன் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு அவர்களது கல்வித்தகுதிக்கேற்ப தனியார் துறையில் உடனடியாக பணியமர்த்தம் செய்ய தனியார் வேலைவாய்ப்பு முகாம் 26 ந் தேதி  நடைபெறவுள்ளது. இதில் தனியார் நிறுவனங்களின் பணிக்காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.  இந்த பணிக்காலியிடங்களுக்கு 19 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரி   மற்றும் பட்டயப்படிப்பு  தேர்ச்சி பெற்ற ஆண்கள் , பெண்கள் தேவைப்படுகின்றனர்.  இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் 26 ந் தேதி  அன்று காலை 11   மணிக்கு  துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது), சாந்தோம்,   என்ற முகவரிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும் என அதில் கூறியுள்ளார்.