Home சுடச்சுட வழக்கறிஞர்களின் சேமநல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு முதல்வர்...

வழக்கறிஞர்களின் சேமநல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

23
0
SHARE

சென்னை, செப். 17&

சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125&வது ஆண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:&

உரிமை

நீதிஎன்பதுமக்களுக்குஅரசியலமைப்புசாசனம்அளிக்கும்உரிமை.  பொதுமக்கள் நம்பிக்கையின் இருப்பிடம் நீதித்துறை.  நமது நாட்டின் நீதி முறைகள்  உலகத்திலேயே பழமையானவை. அதுமட்டுமல்லாமல் அது ஒருவரால் ஒரே நாளில் உருவாக்கப்பட்டது அல்ல.எண்ணற்ற திட்டங்கள், தலைமுறை தலைமுறையாக மக்களிடம் காணப்பட்ட பொறுமை ஆகியவற்றை மூலதனமாக கொண்டு தெளிவான திட்டமிடுதலாலும், பலரின் பெருமுயற்சியினாலும் ஏற்பட்டது.

கடந்தசிலநூற்றாண்டுகளாக  உலகம் முழுவதும் இயங்கிய சட்ட அமைப்புகளால் உருவான  நல்ல முறைகளை உள்வாங்கி இத்துறையானது தன்னைத்தானே மாற்றிக் கொண்டு வளர்ந்து வருகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்திய உயர்நீதிமன்றங்களின்சட்டம் 1861 என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, விக்டோரியா மகாராணியால் வெளியிடப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் மெட்ராஸ்  உயர்நீதிமன்றம் 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.இந்த உயர்நீதிமன்றம்  ஆந்திரா, கேரளா பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்ததால்  அப்போதைய  மெட்ராஸ் பிரசி டென்ஸி  முழுமைக்கும் இது ஹைகோர்ட் ஆப் ஜூடிஸ்சர் அட் மெட்ராஸ்  என உயர்நீதிமன்றம் அமைந்துள்ளஇடத்தை குறிக்கும் வகையில்  பெயரிடப்பட்டது.

பாரபட்சமின்றி

நீதி வழங்கும்

சென்னை உயர்நீதிமன்றம் பாரபட்சமின்றி நீதி வழங்கும் அமைப்பாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டு வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். நீதியின் வரலாறு, கட்டடக்கலை, சட்ட சாஸ்திரங்களின் பாரம்பரியம்என்ற மூன்று பெருமைகளை உள்ளடக்கியதுசென்னை உயர்நீதிமன்றம் என்றால் அது மிகையாகாது.    

இந்திய அரசியலமைப்பில் நீதித்துறை,  ஆட்சித்துறை, சட்டமன்றம் ஆகிய மூன்றும்  தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழமுடியும். தமிழகத்தினை  பொறுத்தவரை  இந்த மூன்று பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன.விரைவாக நீதி கிடைக்கச் செய்வதைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்புவசதிகள்மற்றும்பணியாளர்உள்ளிட்டஅனைத்துவசதிகளையும்நீதிமன்றங்களின்தேவைகளுக்கு

உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வு கொண்டஅரசாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படிசெயல்படும் அரசாக  செயல்பட்டு வருகிறது .

  அருங்காட்சியகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  ஆட்சியில்,சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 56  கோடியே 34  லட்மும், அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் அமைப்பதற்கு ரூ.10 கோடியும்,ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி ரூ.100 கோடியில் துவக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தீர்வு மையம் உருவாகநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு 2011 முதல் 2016&17  வரை 6 ஆண்டுகளில் மாவட்டம் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் , மாநகர உரிமையியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள்,  மகளிர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 33 வகையான419 புதிய நீதிமன்றங்களை  ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றியமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்திசட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுமத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள  மாணவர்களுக்கு வழங்கிட வசதியாக விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதியதாக சட்டக் கல்லூரி தற்போது இயங்கி வருகிறது.

  ரூ. 7 லட்சமாக உயர்வு

மறைந்தமுதல்வர்ஜெயலலிதாஇருந்தபோதுவழக்கறிஞர்கள்தங்கள்சேமநலநிதியைஉயர்த்திவழங்கவிடுத்தகோரிக்கையினைஏற்று,சேமநல  நிதியை  2 லட்சம் ரூபாயிலிருந்து 5.25 லட்சம் ரூபாயாக உயர்த்தி  வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.7 லட்சமாக  சேமநல நிதி உயர்த்தி வழங்கப்படும் .இதனை பெறுவதற்கு சேவை கால வரம்பு எதுவும்  நிர்ணயிக்கப்படவில்லை .தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ளஉள்ள நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள்,  நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உட்பட நீதித் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்காக  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  அரசினால் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவற்றில் 47 நீதிமன்றக் கட்டடங்களில் 185 நீதிமன்ற அரங்கங்கள் கட்டும் பணிகளில், 21 கட்டடங்களில்75 நீதிமன்ற அரங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

20 கட்டடங்களில் 83 நீதிமன்ற அரங்கங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

27 நீதிமன்ற அரங்கங்கள்

  6 கட்டடங்களில் 27 நீதிமன்றஅரங்கங்கள் கட்டும் பணிகள்  தொடங்கப்பட உள்ளன.நீதிபதிகளுக்கு ரூ.75 கோடியே 63 லட்சம் செலவில்  32 கட்டடங்களில், 107 குடியிருப்புகள் கட்டும் பணிகளில்,5  கட்டடங்களில் 11 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன. 22 கட்டடங்களில் 67 குடியிருப்புகள் கட்டும் பணிகள்நடைபெற்று வருகின்றன. மேலும் 5 கட்டடங்களில் 29 குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

  கடந்த  2011&12 ம் ஆண்டு முதல்  2016&17 ம் ஆண்டுவரை இப்பணிகளுக்காக 883 கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 51 கோடியே 28 லட்சம்   மதிப்பீட்டில் 2 கட்டடங்களில் 20 நீதிமன்ற அரங்கங்கள்கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.மேலும் ரூ. 16 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் 26 குடியிருப்புகள் கட்டும் பணிகளும்  தொடங்கப்பட உள்ளன.நீதித்துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வுள்ள அரசாக  மறைந்தமுதல்வர்ஜெயலலிதாவின்

அரசு தொடர்ந்து செயல்படும்.  வரலாற்று சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என தெரிவித்தார்.வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ. 5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும்,இதனை பெறுவதற்கு சேவை கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.