Home விளையாட்டு பி.வி. சிந்து இறுதி போட்டிக்கு தகுதி ‘சீன வீராங்கனையை ஊதி தள்ளினார்’

பி.வி. சிந்து இறுதி போட்டிக்கு தகுதி ‘சீன வீராங்கனையை ஊதி தள்ளினார்’

9
0
SHARE

சியோல், செப். 17&

சீன வீராங்கனையை வீழ்த்தி, இந்தியாவின் பி.வி. சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர், பெண்களுக்கான அரை இறுதி போட்டியில் பி.வி. சிந்து, சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்கொண்டார். முதல் ஆட்டத்தில் பி.வி. சிந்து, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் ஹீயை, 21&10 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தினார். எனினும் 2&வது செட்டில் சுதாரித்து கொண்ட, ஹீ, பி.வி. சிந்துவுக்கு கடும் போட்டி கொடுத்தார். மேலும் ஹீ, அந்த செட்டை 21&17 என்ற கணக்கில் தன் வசப்படுத்தினார். இறுதியில் வெற்றியை தீர்மாணிக்கும் 3&வது செட் நடந்தது. இதில் எதிர்பார்த்தது போலவே, சிந்து அனல் தெறிக்க விளையாடினார். அவரின் வேகத்துக்கு சீன வீராங்கணையால் ஈடுகொடுக்க முடியவில்லை.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், பி.வி. சிந்து 2116 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தினார். அரை இறுதி ஆட்டம் ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்தது. இறுதி போட்டியில் பி.வி. சிந்து. ஜப்பான் வீராங்கணை நவோமி ஓகுஹாராவை எதிர்கொள்கிறார்.