Home உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் புளோரிடா

இயல்பு நிலைக்கு திரும்பும் புளோரிடா

41
0
SHARE

மியாமி, செப். 17&

இர்மா புயலில் சிக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இர்மா சூறாவளி கரீபியன் மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதி சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் அமெரிக்கா பொருளாதார அளவில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புயல் இதுதான். இர்மா, புளோரிடா மாகாணத்தை ஞாயிற்றுக்

கிழமை காலையில் மணிக்கு 210 கி.மீ வேகத்தில் தாக்கியது. இதனால் கூட்டம் கூட்டமாக மக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்தனர். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றாக இது அமைந்தது.இந்த புயல் பல பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா துறைமுகத்தில் மூழ்கிய நான்கு படகுகளும் ஒரு துறைமுக கப்பலையும் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இடையூறாக உள்ள அனைத்து சிதைப் பொருட்களையும் அகற்றியுள்ளனர். துறைமுகத்தின் வடக்கு வாயில் செவ்வாய் மாலையிலிருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது. துறைமுகத்தின் தெற்கு வாயில் புதன்கிழமை காலையிலிருந்து செயல்படுகிறது.துறைமுகத்தில் இயங்கி வந்த பன்னிரண்டு பெட்ரோலியம் விற்பனை மையங்கலில் 10 எரிபொருள் ( சோலின்) விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது.

அதனால் இனி வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்கப்படும்.அமெரிக்காவில் பிரபலமான சுற்றுலா தலமான மியாமி பீச் இர்மாவுக்காக மூடப்பட்டது. அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தை உள்ளடக்கிய ஒரு பெரிய சுற்றுலா பொருளாதார மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இர்மாவுக்காக மக்களின் வருகை தடை செய்யப்பட்ட மியாமி பீச் தற்போது முழு வீச்சில் செயல்படுகிறது.

மின்னிணைப்புபிரச்சனைகளும்சிலபோக்குவரத்துதடைகளும்இன்னும்முழுமையாகசரிசெய்யப்படவில்லை.‘அவர்களை பின்னர் மியாமி போலீஸ் படையினர் கைது செய்தனர். இதுபோன்ற இயற்கை பேரழிவுகளின் போது திருடர்கள் மனிதம் மறப்பது எல்லா ஊர்களிலும் நடந்து தான் வருகிறது.

அதே சமயம் இது போன்ற இயற்கை பேரழிவுகள் போது தான் மனிதனின் மனித தன்மை வெளிவந்து உதவி கரங்கள் நீண்டு இன்னும் சாகாத மனித நேயத்தையும் காட்டிச் செல்கிறது. நம் சென்னை வெள்ளைப் பெருக்கின்போது மக்கள் மனிதத்தை வெளிப்படுத்தியதை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது.

ஏற்கனவே நடந்த கொள்ளையால் அலெர்ட் ஆன மியாமியில் இப்போது பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. புயலுக்காக வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு வர விரும்பினாலும் அவர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. இன்னும் பல பகுதிகளில் மின்னிணைப்பு திரும்ப வரவில்லை.

அலைபேசிநெட்ஒர்க்இணைப்புதிரும்பவராதநிலையும்நிலவுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு, வாகனத்துக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு, திறக்கப்படாத கடைகள் என இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிக அதிகம். அதனால் மக்கள் வீட்டுக்கு இப்போது திரும்ப வேண்டாம் என அரசாங்கம் அருவுறுத்தியுள்ளது. புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். அதிலிருந்து நாம் படிப்படியாக வெளிவருவோம், பொறுமையோடு இருப்போம் என புளோரிடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.