Home மற்றவை ரோகிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவதா? மியான்மர் மீது போர் தொடுக்க வேண்டும் வங்கதேசத்தில் மக்கள்...

ரோகிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவதா? மியான்மர் மீது போர் தொடுக்க வேண்டும் வங்கதேசத்தில் மக்கள் கொதிப்பு

9
0
SHARE

டாக்கா, செப். 17&

ரோகிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும், மியான்மர் மீது போர் தொடுக்க வேண்டும் என வங்கதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மியான்மர் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

இதுவரை சுமார் 4 லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகதிகள் வங்கதேசத்தில் உள்ள காஸ் பஜாரில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகிறது. இந்தநிலையில்ரோகிங்யாமக்களை

அகதிகளாக அனுப்பும், மியான்மர் மீது போர் தொடுக்க வேண்டும் என வங்கதேசத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு 5 முஸ்லிம் அமைப்பினர் தலைமை தாங்கினர். அப்போது அவர் ஆங்சாங் சூகிக்கு எதிராக பேசினார். மேலும் மியான்மர் மீது வங்காளதேசம் போர் தொடுக்க இதுவே சரியான தருணம் என்றும் அப்போது இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் பேசினார். அதை போராட்டக்காரர்கள் வரவேற்று கைதட்டினர்.