Home இந்தியா அடுத்த மாதம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார் முக்கிய பிரபலங்களை...

அடுத்த மாதம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார் முக்கிய பிரபலங்களை சந்திக்க ஏற்பாடு

13
0
SHARE

புதுச்சேரி, செப். 17&

அடுத்த மாதம் (அக்டோபர்) பா... தேசிய தலைவர் அமித்ஷா புதுச்சேரி வந்து முக்கிய பிரபலங்களை சந்திக்கிறார்.

பா.. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த ஜூலையில் புதுச்சேரி வந்தார். குடியரசு தலைவர் தேர்தலுக்கான இந்த பயணத்தின்போது புதுவை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

அவரது வருகைக்கு பின்னர் புதுவையில் மாநில அரசின் பரிந்துரையின்றி அதிரடியாக பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்..க்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் மாளிகையில் மூவரும் பதவியேற்றுக்கொண்டனர்.  ஆனால் இதுவரை அவர்களை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதுவைக்கு 3&வது முறையாக தற்போது மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.  இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பா.. தேசிய தலைவர் அமித்ஷா அக்டோபர் முதல் வாரம் புதுச்சேரி வருகிறார். கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஆய்வுப்பணிக்காக புதுச்சேரி வரும் அமித்ஷா நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.  அப்போது பா...வில் புதுச்சேரி முக்கிய பிரபலங்கள் சேர இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் 3 நியமன எம்.எல்..க்கள் அங்கீகார விவகாரம், கவர்னருடன் ஆட்சியாளர்கள் மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.  புதுவையில் கடந்த ஜூலையில் அமித்ஷா வருகைக்கு பின் ஆட்சி மாற்றம் கோஷத்தை என்.ஆர்.காங்கிரஸ், பா.. முன்வைத்தது.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் அமித்ஷா புதுச்சேரி வரவுள்ள நிலையில் புதுவை அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.