Home இந்தியா பயங்கரவாத தாக்குதலில் குடும்பத்தை இழந்தவருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம்...

பயங்கரவாத தாக்குதலில் குடும்பத்தை இழந்தவருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு

28
0
SHARE

ஜம்மு, செப். 17&

பயங்கரவாத தாக்குதலில் குடும்பத்தை பறிகொடுத்தவருக்கு, ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என காஷ்மீர் அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம் மெந்தர் பகுதியில் வசித்து வருபவர் ரூப் லால். இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கடந்த 1999&ம் ஆண்டு ஜூலை 2&ம் தேதி நடந்த, பயங்கரவாத தாக்குதலில் பறிகொடுத்தார்.

அப்போது அம்மாநில அரசு அவருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியது. இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில், குடும்பத்தை பறிகொடுத்த தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, மனித உரிமை ஆணையத்திடம் ரூப் லால் புகாரை பதிவு செய்தார்.

இதைதொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மனித உரிமை ஆணையம் கவனமாக பதிவுகளை மீளாய்வு செய்தது. இந்த வழக்கு நியாயமாகவும், ரூப் லாலுக்கு சாதகமாகவும் உள்ளதால் இந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் அவருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது“. இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜங் பகதூர் சிங் ஜம்வால் கூறும்போது, “உயிரிழந்த நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 7 பேருக்கு ரூ.35 லட்சம் வழங்க அம்மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் போதுமான இழப்பீடு வழங்காமல் இவ்வளவு காலம் கடத்தியது மனித உரிமை மீறலை வெளிப்படையாக காண்பிக்கிறதுஎன்றார்.