Home மற்றவை நபார்டு வங்கி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு பி.ஆர். பாண்டியன் புகார்

நபார்டு வங்கி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு பி.ஆர். பாண்டியன் புகார்

19
0
SHARE

சென்னை, செப். 17

நபார் வங்கி தமிழ்நாட்டில் குடி மராமத்து பணிக்காக ஓதுக்கீடு செய்த நிதி விவசாயிகளுக்கு சம்பந்தமில்லாமலும், பணிகள் நடைபெறாமலும் இருப்பதால் முறைகேடு நடந்திருப்பதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், முதன்மை பொது மேலாளர்யிடம் புகார் கடிதத்தை அளித்தார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் விவசாயம், நிலத்தடி நீர் முற்றிலும் பறிபோனது. இதனையறிந்து நபார்டு வங்கி 2016&17 ரூ.100 கோடி, 2017&18க்கு ரூ.300கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது வரவேற்கதக்கது. இத்திட்டம் விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைக்கபட்டு 10சதவீதம் விவசாயிகளின் பங்களிப்போடு அக்குழு மூலம் பணிகள் தேர்வு செய்யப்பட்டு நிறைவேற்ற வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை பொறுப்பில் செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் ஆணை வழங்கப்பட்டது.

தற்போது தமிழக முதலமைச்சர் 2016&17 ஆண்டிற்கான ரூ.100 கோடிக்கான பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாகவும், 2017&18 ஆண்டிற்கான ரூ.300 கோடிக்கான பணிகள் விவசாயிகள் குழு மூலம் பணிகள் மேற்கொள்ளபடுவதாக அறிவித்துள்ளார்.

இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.காரணம் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்தவொரு பணிகளும் இத்திட்டம் மூலம் நடைபெறவில்லை, விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லை.

முதல்வரின் அறிவிப்பு படி பணிகள் மேற்கொள்ளாமலேயே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழல் முறைகேடு செய்துள்ளார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

எனவே தாங்கள் உரிய நடவடிக்கை மேற்க்கொண்டு மாவட்டந்தோறும் விவசாயிகள், பொதுப்பணித்துறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தெளிவுபடுத்துவதோடு, ஊழல் முறைகேடின்றி பணிகள் ஆரசாணைக்குட்பட்டு நி¬வேற்ற முன்வர வேண்டும். தாங்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் பணிகள் குறித்து சி.பி.ஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வோம்.