Home இந்தியா ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் சகோதரர் மாதையன் மனு...

ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் சகோதரர் மாதையன் மனு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

14
0
SHARE

புதுடெல்லி, செப். 17&

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் சகோதரர் மாதையன் (வயது 69) ஒரு கொலை வழக்கு தொடர்பாக 1987&ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து 1997&ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. தனது தண்டனையைக் குறைத்து ஜெயிலில் இருந்து விடுவிக்கக்கோரி அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு 2015&ம் ஆண்டு டிசம்பர் 16&ந் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மனுவை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.

  ஆனால் தமிழக அரசு பரிசீலிக்காததால், மாதையன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 20 ஆண்டு சிறையில் இருந்த மற்ற கைதிகளை விடுவித்து விட்டு தன்னை விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அவர் கூறி இருந்தார்.

  இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மாதையன் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.