Home தலையங்கம் சமாதான பேச்சு மூலம் தீர்வு

சமாதான பேச்சு மூலம் தீர்வு

38
0
SHARE

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் விளைவில் இருந்து மீண்டு வருவதற்கே இன்னும் பல நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஹிரோசிமா மற்றும் நாகசாகியில் அதன் தடம் இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது. பிறப்புகளில் கூட அதை மறைக்கமுடியவில்லை, அத்தனை பெரிய வேதியியல் மாற்றம்.

இந்நிலையில், வடகொரியா போருக்குதயாராகிக் கொண்டிருப்பது, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை மிகப்பெரும் அச்சுறுத்துதலுக்கு உள்ளாக்கியுள்ளது.  இயற்கைபேரழிவுகள் என்றால் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொள்ளலாம், உலகப் போரின் போது என்னசெய்ய முடியும், பூமியை தகர்க்கும் குண்டுகளிடையே புதைந்துதான் போகவேண்டும். உலகப்போரைமூட்டும் அளவுக்கு வடகொரியா பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறதா? என்றால் இல்லை. சரியான வளர்ச்சியையும் எட்டாத நாடு, மொத்த உலக நாடுகளையும் பயமுறுத்திக் கொண்டிருப்பது சிறு குழந்தைகளுக்கு பூச்சாண்டிக் காட்டுவதுபோலாகும், ஆனால் இதன் விளைவுகள் விபரீதமாகும், அதை தடுக்கும் வழிகள் அவர்களுக்கே கூட தெரியாமல் போகலாம்

தான் பின் தங்கிய நாடு என்ற தன்னிழிவா இல்லை? மற்ற நாடுகள் முன்னேறிவிட்டது என்ற கோபமா?. காரணம் எதுவாக இருந்தாலும் உலகப்போர் என்பது தீர்வாகாது. அண்டை நாடுகளும், அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவிப்பதைகண்டுகொள்ளாமல், குண்டு போடுவதையே குறிக்கோளாக வைத்திருப்பதன் விளைவு நாளை புதிய உலக வரைபடத்தைஉருவாக்கும் அறிஞர்களுக்குத்தான் தெரியும். இருமுறை பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நிகழ்த்தியது, எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென்றாலும்,தன்னிடம் உலகை அழிக்கும் அளவுக்கு வலிமை உள்ளதை வடகொரியா வலியுறுத்துவதாகத்தான் தெரிகிறது.

இரண்டாம் உலகப்போரில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பானாக இருந்தாலும், இன்று எண்ணிலடங்கா வளர்ச்சியைஅடைந்துள்ளது. இதே மாற்றம் மூன்றாம் உலகப்போரின் முடிவில் ஒவ்வொரு நாடுகளும் அடையுமா என்றால் நிச்சயம்சாத்தியமில்லை. ஒவ்வொருநாடும் தன் திறமையை காட்டி சண்டையிட்டு கொள்வதில் அதிகம் பாதிக்கப்படபோவது , ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகள் தான்.

வளர்ச்சி என்பது அழிவிலிருந்து தோன்றக்கூடாது, அது நிலையாகவும் இருக்காது. மூன்றாம் உலகப்போரை கைவிட்டுவிட்டு பல நாடுகளுடன் ஒன்றிணைந்து முன்னேற்ற பாதையில் வட கொரியா செல்வதே, உலக வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் பாதுகாப்பு.பொருளாதார தடை விதித்ததால் கோபமடைந்த வடகொரியா ஜப்பானை குறி வைத்து ஏவுகணையை ஏவி உள்ளது. இதற்கு ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. .நா.சபை பல முறை கண்டித்தும் வட கொரியா கேட்பதாக இல்லை. இதை தொடர்ந்து 6&வது முறையாக ஐ.நா.சபை பல்வேறு பொருளாதார தடைகளை வடகொரியா மீது விதித்துள்ளது. இதனால் இன்னும் கோபம் அதிகமாகி அமெரிக்கா, ஜப்பானை அழிப்போம் என்று வடகொரியா மிரட்டி உள்ளது. உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை வடகொரியா கைவிட வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

எது எப்படியோ வடகொரியா தனது செயலை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் உலகப்போரில் கொண்டு விட்டு விடும்.3&வது

உலகப்போர் ஏற்பட்டால் அதன் விளைவு மிகவும் பயங்கரமாய் இருக்கும். உலகில் உயிரினமே இல்லாமல் அழிக்கும் அளவுக்கு இன்று எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இந்த ஆயுதங்களை பயன்படுத்தினால் பல நூறு ஆண்டுகள் பூமியில் மரம், செடி, கொடி மட்டுமல்ல மனிதனும், விலங்குகளும் கூட  மிஞ்சமாட்டார்கள். ஆகவே இதனை உணர்ந்து சமாதானப்பேச்சு மூலம் தீர்வு காண உலக நாடுகள் முன் வர வேண்டும்.