Home தமிழகம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வுஆட்சியர் ஆய்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வுஆட்சியர் ஆய்வு

11
0
SHARE

தாம்பரம், செப். 17&

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. தாம்பரத்தில் நடைபெற்ற தேர்வில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று தேர்வு நடந்தது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வு காஞ்சி மாவட்டத்தில் சி.எஸ்.. கார்லி பள்ளி, வள்ளுவர் குருகுலம், ஜெயகோபால் கரோடியா உள்ளிட்ட ஆகிய 12 மையங்களில் நடந்தது.தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடந்தது. மாவட்டம் முழுவதும் 4644 பேருக்கு 3531 பேர் தேர்வு எழுதினர்.

தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.திருவளர்செல்வி, தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.