Home அரசியல் விரைவில்சிறைக்குசெல்வார் டி.டி.வி. தினகரன்: முதல்வர் ஆவேச பேச்சு

விரைவில்சிறைக்குசெல்வார் டி.டி.வி. தினகரன்: முதல்வர் ஆவேச பேச்சு

13
0
SHARE

சென்னை, செப். 17&

விரைவில் சிறைக்கு செல்வார் டி.டி.வி. தினகரன் என்று முதல்வர் ஆவேசத்துடன் பேசினார்.

வட சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாங்கள் எல்லாம் முறைப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்தவர்கள் இங்கே அமர்ந்து இருக்கிறார்கள். ஒரே நாளில் உறுப்பினராகி ஒரே நாளில் பதவியை வாங்கி ஒரே நாளில் எல்லாத்தையும் தூக்குகிறார்கள் உலத்தில் இப்படி ஒரு அதிசயம் எங்குமே நடைபெறாது.

உங்களுக்கே இப்படி இருக்கிறது என்றால் கட்சியில் நாங்கள் உழைத்து பெற்று பதவியில் நாங்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கவேண்டும். உழைப்புதான் என்றும் நிற்கும் குறுக்கு வழி நிற்காது.

இவர் ஏதோ எங்களுக்கு எம்.எல்.. சீட் கொடுத்த மாதிரியும், ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்தமாதிரியும், அவரால் நாங்கள் ஆட்சியில் அமர்ந்த மாதிரியும் நாங்கள் ஏதோ துரோகம் செய்து விட்டோம் என சொல்கிறார். யோசித்துப்பாருங்கள் இவரா எங்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு ஒரே தொகுதியில் ஒன்பது முறை போட்டியிட்டுள்ளேன். எடப்பாடி சட்டமன்றத்தில் ஆறு முறை வேட்பாளராக போட்டியிட்டேன்.

நான்கு முறை வெற்றிபெற்றுள்ளேன்.மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன் ஒரு முறை வெற்றி பெற்றேன். ஒன்பது முறை யாருடைய சிபாரிசும் இல்லாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கால் மக்களின் ஆதரவால் நான் போட்டியிட்டேன் வெற்றியும் பெற்றேன். ஒன்பதாவது முறையாக போட்டியிட்டபோது 42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.

நீஎதாவதுஎங்களுக்குவந்துசீட்டுவாங்கிகொடுத்தியா? பிரச்சாரம் செய்தாயா?  இல்லை வெற்றிபெற வைத்தாயா? எதையுமே செய்யவில்லை. பிறகு நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய்.

நாங்கள் எல்லாம் கட்சியில் உழைத்து கஷ்டப்பட்டு வந்துள்ளோம்.  இந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் உங்களுக்கும் என் சம்பந்தம் இவர்கள் எப்படியாவது குடும்பத்தோடு இந்த கட்சியையும் ஆட்சியையும் பிடித்துவிட வேண்டும் என்று வெறித்தனத்தோடு இருக்கிறார்கள். ஆட்சியை உங்களால் எவ்வாறு கலைக்கமுடியும், உன்னால் ஆட்சிக்கு வந்தோமா இல்லைஎம்.எல்.. ஆனோமா, உனக்கு துரோகம் செய்தோம் என்று கூறினால் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாருமா உனக்கு துரோகம் செய்துவிட்டார்கள். அவர்களின் ஆதரவோடு தான் நான் முதல்வர் ஆகியுள்ளேன்.கட்சியில் இருந்து யாரும் உங்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வில்லை. நீங்கள் குறுக்குவழியில் குறுகிய மனதுடன் கட்சியையும், ஆட்சியையும் அடைய நினைக்கிறீர்கள் அது நடக்காது.

இந்த கட்சியின் மீது பற்றும் பாசம் கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட கட்சிக்கு துரோகம் இழைத்தவர் டி.டி.வி. தினகரன். நாங்கள் வீட்டில் இருந்து வந்து வீட்டிற்கு தான் செல்வோம், அதேபோல் நீங்களும் வீட்டிலிருந்து வந்தீர்கள் இன்னும் சிறிது  காலத்தில் சிறைக்குத்தான் செல்லப்போகிறீர்கள் என்று பேசினார்.