Home சம்பவம் கேரளத்தில் பரிதாபம் 9 வயது சிறுமியின் உடலில் எச்.ஐ.வி. ரத்தம் விசாரணைக்கு உத்தரவு

கேரளத்தில் பரிதாபம் 9 வயது சிறுமியின் உடலில் எச்.ஐ.வி. ரத்தம் விசாரணைக்கு உத்தரவு

19
0
SHARE

திருவனந்தபுரம், செப்.16&

கேரளாவில், 9 வயது சிறுமிக்கு எச்..வி. பாதித்தவரின் ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், கேரளத்தில் உள்ள புற்றுநோய் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரின் உடல் நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து டாக்டர்கள் அவரை, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக அந்த சிறுமியின் ரத்தத்தை பரிசீலித்து பார்த்த போது, அவரின் ரத்தத்தில் எச்..வி. தொற்று கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கேரளா மருத்துவக்கல்வியின் இணை இயக்குனர் டாக்டர். ஸ்ரீகுமாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

விசாரணைக்கு பிறகு வழக்கு குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான, மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.