Home சுடச்சுட விற்பனை விலை 35 சதவீதம் வீழ்ச்சி வெங்காயவியாபாரி வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு

விற்பனை விலை 35 சதவீதம் வீழ்ச்சி வெங்காயவியாபாரி வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு

21
0
SHARE

நாசிக், செப். 16&

வெங்காய வியாபாரி வீடு, கடைகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.. சோதனை நடத்தப்பட்டதால், விலையில் 35 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டது.

வெங்காயம், தக்காளி உள்ளிட்ட உணவு பொருட்கள், சில நேரங்களில் ஏழைக்கு எட்டாகனியாக மாறுவதுண்டு. இது மேல்தட்டு மக்கள் மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் கண்கூடு.

இந்த விலை ஏற்றத்துக்கு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு இயற்கை காரணம் என்ற போதிலும், சில நேரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.

இதேபோல் தான் கடந்த ஆண்டு வெங்காயம் மற்றும் தக்காளி உச்ச விலையை தொட்டது. இதற்கு நாட்டில் உள்ள சில பதுக்கல் வியாபாரிகள்தான் காரணம் என்று அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் வெங்காய வியாபாரம், பெருமளவு நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலம நாசிக்கில் உள்ள 7 வியாபாரிகள் வீடு, கடைகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று மத்திய புலனாய்வு குழுவினர் (சி.பி..) அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோதி, உயர்மதிப்பிலான ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றும் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அறிவித்தார்.

அப்போது இந்த வெங்காய வியாபாரிகள் அதிகளவு பணத்தை மாற்றி உள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையிலே ரெய்டு நடந்துள்ளது. நாசிக்கில் உள்ளலசல் கான் வேளாண் உற்பத்தி சந்தைநாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய சந்தையாக திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.