Home விளையாட்டு ஷிகர் தவான் விலகல்: ரகானேவுக்கு வாய்ப்பு

ஷிகர் தவான் விலகல்: ரகானேவுக்கு வாய்ப்பு

13
0
SHARE

சென்னை, செப். 16&

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகி உள்ளதால், அவருக்கு பதிலாக அசான்சே ரகானே சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் தவான் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் அவரின் மனைவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

இதனால் ரகானேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்த அணியில் ஆரோன் பிஞ்ச காயத்தால் அவதிப்படுகிறார். எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரராக, ஹில்டன் கார்ட்ரைட் துவக்க ஆட்டக்காரராக இறங்க வாய்ப்பு உள்ளது.