Home சுடச்சுட கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தையை இலையில் கட்டி ஊர்வலம் விசாரணை நடத்த...

கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தையை இலையில் கட்டி ஊர்வலம் விசாரணை நடத்த உத்தரவு

21
0
SHARE

திருவனந்தபுரம், செப். 16&

கேரளாவில் கிருஷ்ணஜெயந்தி விழாவில் குழந்தையை இலையில் கட்டி ஊர்வலம் சென்றதாக கூறப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளமாநிலம்கண்ணூர்மாவட்டம்பையனூரில்கிருஷ்ணஜெயந்திவிழாசங்பரிவார்அமைப்புசார்பில்கொண்டாடப்பட்டது.

விழாவையட்டி கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மினிலாரியில் செயற்கையாக ஆலமரத்தின் இலை பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டது. அந்த இலையில் கிருஷ்ணா வேடமணிந்த ஒரு குழந்தையை கயிறு மூலம் கட்டி ஊர்வலம் நடந்தது.

குழந்தையுடன் வெயிலில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இதுபற்றி சைல்டு லைன் அமைப்பிற்கு போன் மூலம் புகார் செய்தார். அவர்கள் உடனடியாக இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் குழந்தையுடன் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தை தனது செல்போனில் படமெடுத்து அதை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்தவர்கள் தங்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவிட்டனர்.

மேலும் குழந்தையுடன் ஊர்வலம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டன. இதைப் பார்த்த மாநில குழந்தைகள் நல அதிகாரி உடனே இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கண்ணூர் போலீஸ் சூப்பிரண்டு, குழந்தைகள் நல அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் விசாரணைக்கு உத்தரவிட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கி உள்ளன.

செல்போன்மூலம்பலர்பேசிகொலைமிரட்டல்விடுத்துவருகிறார்கள். கடிதம் மூலமும் அவருக்கு மிரட்டல்கள் சென்றுள்ளது. இதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.