Home அரசியல் வருகிற 30&ந் தேதிக்குள் ‘இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’

வருகிற 30&ந் தேதிக்குள் ‘இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’

22
0
SHARE

சென்னை, செப். 16&

தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி அதிகபட்சம் வரும் 30ம் தேதிக்குள் முடிவுக்கு வந்து விடும்மென அ.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்ததாவது,

எங்களால் முதல்வர் ஆகிக்கொண்டு யார் இவர்களை பன்னீர்செல்வம் தலைமையில் எதிர்த்தார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இதைத்தான் கலியுகம் என்பார்கள். கலியுகத்திலே தான் இந்த துரோகம் எல்லாம் நடைபெறும் இன்னும் ஒரு வாரத்திலே நாங்கள் சட்டமன்றத்தில் இந்த துரோகத்திற்கு எல்லாம் முடிவு விழா நடத்தி விடுவோம்

அவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்து விட்டது அதை நாம் கொண்டாடுவோம். .தி.மு..வின் பேரை யாரும் உபயோகிக்கக்கூடாது.  இது தேர்தல் கமிஷனில் உள்ளது. இப்பொழுது நடைபெற்ற பொதுக்கூட்டம் அ.தி.மு.. (புரட்சித்தலைவி அம்மா) அணியினுடைய பொதுக்கூட்டம் இது அ.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் கிடையாது.

நாங்கள்பலபொதுக்குழுஉறுப்பினரைமாற்றியுள்ளோம்அங்குசென்றவர்கள்அ.தி.மு..(அம்மா) அணியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல. பல நாட்கள் கழகப்பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புடன் அறிக்கை வெளியிட்டு பின்பு துணைப்பொதுச்செயலாளர் என ஒரு பொறுப்பே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். அதிகாரமும் காவல்துறையும் கையில் இருக்கும் தைரியத்தில் செயல்படுகிறார்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அனைவரும் கீழே வந்து விடுவார்கள்.

கோர்ட்டேஅந்தகூட்டத்திற்குசட்டப்படிஉரிமைவழங்கவில்லைஎன்றுகூறியுள்ளநிலையில், அக்டோபர் 23ம் தேதிதான் இந்த கூட்டமே பொதுக்குழு கூட்டமா இல்லையா என்பதை சொல்வார்கள். அதன்பிறகே இவர்களின் தீர்மானத்தைப்பற்றி கேள்வி வரும். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையாக எங்கள் பேரை கூறி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என மனு கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

கட்சியைப்பொறுத்தவரை பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கும் மீண்டும் சேர்ப்பதற்கும் பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு. இப்பொழுது அவரின் சார்பாக துணைப்பொதுச்செயலாளருக்கு உண்டு இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்திடம் சென்று துணைப்பொதுச்செயலாளராக என்னை நியமித்திருப்பதாக கூறிவிட்டு இப்பொழுது அப்படி ஒரு பொறுப்பே இல்லை நியமனம் செல்லாது என்று கூறினால் எந்த வகையில் நியாயம். நீதி விசாரணை நடத்தட்டும் அதில் சசிகலா தங்கம் என நிருபிக்கப்படும். நிச்சயம் அப்பொழுது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திடம் கேள்விகள் கேட்கப்படும்.

10 நாட்கள் முன்பு வரை ஊழல் ஆட்சி என்று கூறிவிட்டு இப்பொழுது துணைமுதல்வராக உள்ளார். அமைதிப்படை படத்தில் தான் அமாவாசை கதாப்பாத்திரம் வரும் இங்கே உண்மையாக அமாவாசை இரண்டு பேர் உள்ளனர். நான் எங்கு சென்றாலும் அது பொதுக்கூட்டமே இல்லை அதைப்பற்றி எதுக்கு பேசிகிட்டு இருக்கிங்கனு கேட்கிறார்கள்.

  கமலஹாசன் எந்த முறையில் கூறினார் என்று தெரியவில்லை எம்.எல்..க்கள் யாரும் வேலைநிறுத்தம் செய்யவில்லை சட்டமன்றம் இல்லாதபோது அவர்கள் தொகுதியில் இருப்பார்கள் இல்லையென்றால் தலைமைச்செயலாளரை வந்து சந்திப்பார்கள் எங்கள் எம்.எல்..க்கள் தலைமைச்செயலகம் வந்தால் எடப்பாடி அணியில் சேர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். எந்த பிரச்சனையும் வரக்கூடாதென்று இருக்கிறார்கள். இந்த ஆட்சி அதிகபட்சம் 30&ம் தேதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் நாமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம் என்று தினகரன் கூறினார்.