Home மற்றவை ராஜேந்திரன் உத்தரவு செல்லாது தினகரன் அணி கொறடாவாக வெற்றி வேல் நியமனம்சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்

ராஜேந்திரன் உத்தரவு செல்லாது தினகரன் அணி கொறடாவாக வெற்றி வேல் நியமனம்சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்

12
0
SHARE

சென்னை, செப். 16&

ராஜேந்திரன் உத்தரவு செல்லாது என்று கூறி தினகரன் அணி கொறடாவாக வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.

சட்டமன்ற அ.தி.மு.. கொறடாவாக ராஜேந்திரன் எம்.எல்.. உள்ளார். இவர் தினகரன் ஆதரவு அணி எம்.எல்..க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருந்தார்.

முதல்அமைச்சருக்கு எதிராக கவர்னரை சந்தித்தது குற்றம் அரசை குறைகூறி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தது தவறு என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இந்த கடிதத்தை 19 எம்.எல்..க்களுக்கும் சபாநாயகர் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு வெற்றிவேல் , தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சில எம்.எல்..க்க்ள் நேரில் சென்று சபாநாயகரிடம் விளக்கம் அளித்தனர்.

நாங்கள் எந்த வகையிலும் தவறு செய்யவில்லை. எங்களுக்கு கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கொறடா உத்தரவு சட்டசபைக்கு தான் பொருந்தும். வெளியில் நடப்பதை கட்டுப்படுத்தாது என்று கூறி இருந்தனர்.

இதற்கிடையே அ.தி.மு.. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்..க்கள் சட்ட சபையில் தனியாக செயல்படுவது என முடிவு எடுத்துள்ளனர். இதையட்டி கொறடா ராஜேந்திரனை நீக்கிவிட்டு புதிய கொறடாவாக வெற்றி வேல் எம்.எல்.. நியமிக்கப்பட்டுள்ளதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை வெற்றிவேல் எம்.எல்.. சபாநாயகர் தனபாலிடம் நேற்று முன்தினம் நேரில் சென்று கொடுத்தார். இதுபற்றி வெற்றிவேல் எம்.எல்.. கூறியதாவது: கொறடா ராஜேந்திரனின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது அது செல்லாது. .தி.மு.. அம்மா அணிக்கு கொறடாவாக என்னை டி.டி.வி. தினகரன் நியமித்துள்ளார்.

சட்டசபையில் ஏற்கனவே ராஜேந்திரன் கொறடாவாக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனியாக செயல்பட்டனர். அப்போது செம்மலை அந்த அணிக்கு கொறடாவாக இருந்தார். அதை அப்போது சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

சட்டசபையில் அரசுமீது நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக இந்த 11 எம்.எல்..க்களும் வாக்களித்தனர்.

அதேபோல்சட்டசபையில்நான்கொறடாவாகசெயல்படுவேன். ராஜேந்திரனின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார். தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் 18 பேரின் சார்பில் வெற்றிவேல் எம்.எல்..வும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது:&

முதல் அமைச்சர் அ.தி.மு.. எம்.எல்..க்கள் கூட்டத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டியதாவும், அதில் குறிப்பிட்ட எம்.எல்..க்கள் (தினகரன் அணி) பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாகவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி ஒரு கூட்டம் நடப்பதாக எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை.

எனவேஎங்களுக்குகடிதம்அனுப்பியதைஉறுதிசெய்யும்ஆவணங்களைஎங்களுக்குதரவேண்டும். இது சம்பந்தமாக நாங்கள் முதல்வரிடமும் கொறடாவிடமும் விசாரணை நடத்துவோம். அதன்மூலம் அவர்கள் தவறு செய்ததை நிரூபிப்போம். அதன் பின்னர் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

.பன்னீர் செல்வத்தை வெளியேற்றி விட்டதாக தேர்தல் கமிஷனரிடம் முதல் அமைச்சர் ஆவணங்களை தாக்கல் செய்தார். இப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை சபாநாயகரிடம் அளித்து விட்டு வெளியே வந்த ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம். எங்கள் எம்.எல்..க்கள் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராக வேண்டுமென்றால் அதற்கு கர்நாடக போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக போலீசாரை நாங்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.