Home சுடச்சுட நவோதயா பள்ளிகள் மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது மு.க.ஸ்டாலின் ...

நவோதயா பள்ளிகள் மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது மு.க.ஸ்டாலின்  கண்டனம்

25
0
SHARE

சென்னை, செப். 15& 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் மூலம் பா... அரசு இந்தி திணிப்பிற்கு முயல்கிறது என மு..ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க செயல் தலைவர்  மு..ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் அடுத்தகட்ட முயற்சியாக ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளைக் கொண்டுவரத் திட்டமிடும் மத்திய பா... அரசுக்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி நிர்வாகத்தில் உள்ள  நவோதயா வித்யாலயா சமிதி  என்ற அமைப்பின் மூலம் நடத்தப்படும் ஜவஹர் வித்யாலாயா பள்ளிகளில், முழுக்க முழுக்க இந்தி மொழிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும்  இந்தி வாரம்  என்று செப்டம்பர் 14 முதல் 28ந் தேதி வரை கட்டாயம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்தப் பள்ளிகளைத் தொடங்க தமிழகத்தில் அனுமதித்தால், கிராமங்கள் தோறும் இந்தி விழா கொண்டாட்டம் நடக்கும். மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், 6 ம் வகுப்பிற்கே நுழைவுத் தேர்வை மத்திய அரசு இதன் மூலம் புகுத்த விரும்புகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் கற்க வேண்டிய சூழல் உள்ளது.  ஆனால் நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்களின் கனவைச் சிதைத்து, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, தீவிர இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ள மத்தியில் உள்ள பா..., தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டுகிறது. ஆகவே, மத்திய பா... அரசு மாநிலத்தில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு விரோதமாகவும்  ஜவஹர் வித்யாலயா பள்ளிகளை திறக்கும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும்.   

மொழிப் போராட்டத்தின் விளைவாக, உருவான இருமொழிக் கொள்கைக்கும், தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மத்தியில் உள்ள பா... அரசு செயல்படும் என்றால், அதை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், தி.மு..தொண்டர்களும் தங்களது இன்னுயிரை கொடுத்தாவது தமிழ் மொழிக் காப்பர் என அதில் கூறியுள்ளார்.