Home மற்றவை எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில்...

எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் வழக்கு

13
0
SHARE

சென்னை, செப். 15&

எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.. ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்ற சர்ச்சை எழுந்து உள்ளது.

மொத்தம் உள்ள 134 .தி.மு.. எம்.எல்..க்களில் 21 பேர் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 113 எம்.எல்..க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு 4 எம்.எல்..க்கள் தேவைப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர்ராவை தி.மு.. செயல் தலைவர் மு..ஸ்டாலின் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் இது தொடர்பாக கவர்னர் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதை தொடர்ந்து மு..ஸ்டாலின் எடப்பாடி அரசு மெஜா ரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் தனக்குள்ள பெரும் பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கூறிப்பட்டு இருந்தது. எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்..க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அரசு தலைமை வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் பெரும் பான்மையை நிரூபிக்கும்  வரை தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் வக்கீல் வலியுறுத்தினார்.