Home தமிழகம் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக திருநங்கைகள் தொழில் துவங்க வேண்டும்கலெக்டர் அறிவுரை

சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக திருநங்கைகள் தொழில் துவங்க வேண்டும்கலெக்டர் அறிவுரை

36
0
SHARE

திருப்பூர், செப். 15&

சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக, திருநங்கைள் தொழில் துவங்க வேண்டும்என திருப்பூர் கலெக்டர் திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கினார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் திருநங்கையர்களுக்கு, தொழிற்பயிற்சி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். தொடர்து அவர் பேசுகையில், திருப்பூர் நெரிபெரிச்சல் பகுதியில் திருநங்கையர்கள் குழு அமைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தையல் பயிற்சி அளிக்கபடுறது. இதற்கு கோயமுத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி ரூ.5 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளது. கடன் மூலம் ஆடை தயாரிக்கும் பணி மேற்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டுவருகிறது. வங்கிக்கடன் வாங்கியவர்கள் சரியான காலகட்டத்தில் திருப்பி செலுத்தி உள்ளார்கள்.

அதுமட்டுமின்றிஇன்றளவில்அந்தகுழுசிறப்பானமுறையில்செயல்பட்டுவருகிறது. அதேபோல் தற்பொழுது 20 பேர் கொண்ட குழுவிற்கு கனரா வங்கி உதவியுடன் ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பினாயில் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் 10 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தற்பொழுது பயிற்சி முடித்த குழுவினருக்கு மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

தமிழக அரசு திருநங்கையர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு, அந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொருத்த வரையில் 115 நபர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 86 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

அதேபோல் 50 நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. 12 நபர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார்கள். மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக 12 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கபட்டுள்ளது.

அதில்இந்திராநினைவுகுடியிருப்புதிட்டத்தின்மூலமாகவீடுகள்கட்டிஅவர்கள்பயன்பெற்றுவருகிறார்கள். மேலும் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கவும், பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்ஒவ்வொருவருக்குஅடையாளஅட்டைமிகமுக்கியமானஒன்றாகும். எனவே யாரும் விடுபடாமல் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

திருநங்கையர்கள்இதுபோன்றஅரசின்திட்டங்களைபெற்று, ஒவ்வொருவரும் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக தன்னம்பிக்கையுடனும் தைரியமுடனும் வாழ்ந்திட வேண்டும் என பேசி அறிவுரை வழங்கினார்.