Home இந்தியா இந்தியாவில் முதல் முறையாக மும்பை & அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இன்று அடிக்கல்...

இந்தியாவில் முதல் முறையாக மும்பை & அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இன்று அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் பங்கேற்பு

16
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

மும்பை & அகமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. நரேந்திர  மோடியுடன் ஜப்பான் அபேயும் பங்கேற்கின்றனர்.

மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் என்ற பெருமையைப் பெறுகிறது. இது குறித்து டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:&நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் அதிவேகமாக இயங்கக் கூடிய புல்லட் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, மும்பை& அகமதாபாத்  இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.  இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயம் கலந்து கொள்கின்றனர். நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான இந்த விழா ஒரு வரலாற்று தருணமாகும். மும்பை & அகமதாபாத் இடையிலான 508 கி.மீ. தூரத்தை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும். இதில் ஜப்பான் ரூ.88 ஆயிரம் கோடி ரூபாயை 0.1

சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது. இதை 50 ஆண்டுகளில் 15 ஆண்டு சலுகை காலத்துடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மும்பை & அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர் மட்ட பாதையாகவும் 27 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவும் 13 கி.மீ. தூரம் தரையிலும் பாதை அமைக்கப்படும். 21 கி.மீ. சுரங்கப்பாதை நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும் 7 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கு அடியில் ரயில் பாதை அமைக்கப்படும். புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 320 கி.மீ. ஆகவும் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. ஆகவும் இருக்கும். 12 ரயில் நிலையங்களில் ரயில் நின்றால் பயண நேரம் 2 மணி 58 நிமிடமாக இருக்கும். அதேநேரம் 4 ரயில் நிலையங்களில் நின்றால் பயணநேரம் இரண்டு மணி நேரம் 7 நிமிடமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.