Home சுடச்சுட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ&ஜியோ அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ&ஜியோ அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

13
0
SHARE

சென்னை, செப். 14&   

ஜாக்டோஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும்  திட்டமிட்டப்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த 7&ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். 8&ந் தேதி நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.   

அதனைத் தொடர்ந்த நடைபெற்ற ஜாக்டோஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஜாக்டோ &

ஜியோ அமைப்பிற்கு ஒருங்கிணைப்பாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் அந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழு சம்பளம் அளிக்கும் வரை இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

அதைத் தொடர்ந்து  கடந்த 11&ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டமும், 12&ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ செய்திதொடர்பாளர் தியாகராஜன்,  திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். மேலும்  கோரிக்கைகள் நிறைவேறும்வரை காத்திருக்கவும் முடிவு செய்துள்ளோம்.

மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி அரசு உடனே ஜாக்டோஜியோ உயர்மட்ட குழுவை உடனே அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பல்வேறு

அச்சுறுத்தல்களையும் தாண்டி லட்சக்கணக்கான ஆசிரியர் அரசு ஊழியர்கள் பங்கேற்பர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் எழிலகத்தில் வளாகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

சென்னை எழிலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமர்வதற்காக பெரிய பந்தல் அமைத்து, நாற்காலிகளும் போட்டிருந்தனர். மேலும் பெண் ஊழியர்கள் அமர்வதற்கு வசதியாக ஆண் ஊழியர்கள் இடம் அளித்தனர். காத்திருப்பு போராட்டம் திட்டமிட்டப்படி தொடர்ந்து நடைபெறும் போது ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உணவு அளிக்க வேண்டும். இதற்காக அவர்களே சமையல் செய்வதற்கு ஏதுவாக பெரிய பாத்திரம், கேஸ்டவ் போன்றவற்றை எடுத்து வந்து சமையல் செய்தனர். இதனிடையே காவல்துறையினர் சமையல் செய்து வழங்குவதற்கு அனுமதி  இல்லை என கூறினர். ஆனால் நாங்கள் எங்களின் அலுவலக வளாகத்தில் தான் நடத்துகிறோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் யாருக்கும் பாதிப்பு இன்றி அரசு அழைத்து பேசும்வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக தொடர்ந்து தங்குவதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஜாக்டோ ஜியோவின் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் முத்துசாமி துவக்கி வைத்து பேசும்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தப்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர் வழியில் ஆட்சிச் செய்யும் முதல்வர் இதனை நிறைவேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என தெரிவித்தார்.

இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், தாஸ், சுப்பிரமணியன், வெங்கடேசன் ஆகியோர் கூறும்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதியத்திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், 8 வது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்கும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் அரசு எங்களை அழைத்து பேசி, அதன் கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும். அரசு அழைத்து பேசும்வரை எங்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும். மதுரை உயர்நீதிமன்றத்தில் போராட்டம் செய்ய கூடாது என கூறியுள்ளது. ஆனால் நாங்கள் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகுதான் இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்திற்கு முழு காரணமும் அரசுதான். எனவே உயர்நீதிமன்றம் அரசிற்கும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அறிவுரை வழங்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 17(ஏ) விளக்க கடித்தம் கொடுத்து மிரட்டி உள்ளனர். நாங்கள் நீதிமன்றம் சென்று உரியமுறையில் எதிர்கொள்வோம். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு முயற்சி செய்யாமல், எங்களை  அழைத்து பேச வேண்டும். 14 ஆண்டுகளாக இருந்து வரும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்தும், கைது செய்தும் உள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 2லட்சத்திற்கு மேற்பட்டோர்  பங்கேற்று இருப்பார்கள் என தெரிகிறது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் திட்டமிட்டபடி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஈடுபட்டனர். பெண் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோவின்  ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   அரசின் எவ்வித அச்சுறுத்தலுக்கும் பணியாது, தற்போது நடைபெற்று வரும் தொடர் வேலைநிறுத்தத்தின் ஒரு கட்டமான காத்திருப்புப் போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவது என்றும், 15 ந் தேதி  மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேரில் ஆஜராகி, வழக்கினைச் சட்டப்படி எதிர்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here