Home அரசியல் ‘நீட்’ தேர்வில் தமிழக சட்டமன்றம் இயற்றிய 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின்...

‘நீட்’ தேர்வில் தமிழக சட்டமன்றம் இயற்றிய 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

37
0
SHARE

சென்னை, ஆக. 14&  நீட் தேர்வில் தமிழக சட்டமன்றம் இயற்றிய 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசை மு..ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்

தி.மு.. செயல் தலைவர் மு..ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு செல்லுமா அல்லது செல்லாதா என்ற வழக்கு 16 மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. அப்படி வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, மத்தியில் உள்ள பா... அரசு அவசர அவசரமாக அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாகத் திணித்து சமூகநீதியை சாகடித்து இருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல், தமிழகச் சட்டமன்றத்தையே அவமதித்திடும் வகையில், அடாவடியாக மத்தியில் உள்ள பா... அரசு மேஜைக்கு அடியில் போட்டுப் பூட்டி வைத்துக் கொண்டு நீட் தேர்வை நடத்த அனுமதியளித்தது.

கூட்டுறவு, கூட்டாட்சி  என்று பேசிக்கொண்டே,  உதட்டில் ஒன்று உள்ளத்தில் வேறொன்று  என்பதற்கொப்ப இரட்டை வேடம் போட்டு மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை எல்லாம் மீறி, நீட் தேர்வை நடத்திய மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்வித்தாள் என்ற விசித்திரமான தேர்வுமுறையைக் கடைப்பிடித்தது. அதனால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானர். இந்நிலையில்,  அடுத்த வருடம் முதல் அனைத்து மாநிலத்திலும் ஒரே மாதிரி கேள்வித்தாளில்தான் நீட் தேர்வு நடத்த வேண்டும்  என்று மத்திய அரசின் கல்வி நிறுவனத்தை   உச்சநீதிமன்றமே கடிந்து கொண்டிருக்கிறது.

தமிழக மாணவர்களை வஞ்சித்திருக்கின்றன.  11.8.2017 அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு மசோதா குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடாமல் வந்திருப்பது அதைவிட வேதனையை அளித்திருக்கிறதுஆகவே,   நீட் தேர்வு விவகாரத்தில் இதுவரை மத்திய பா... அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு மாநில அரசு வெளியிட வேண்டும்.  அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு மத்திய அமைச்சரிடமும் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

உள்ளபடியே மத்திய பா... அரசுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமென்றால், நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதாக அதில் கூறியுள்ளார்.